current affairs daily 6/9/2019

9.ரூ.45 ஆயிரம் கோடியில் 83 தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்க எச்.ஏ.எல்., நிறுவனத்துடன் இந்திய விமானப்படை ஒப்பந்தம் கையெழுத்தானது. உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்நிறுவனம் தயாரித்த 16 தேஜஸ் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

8.ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே 95 வயதில் காலமானார். இதனை அந்நாட்டு அதிபர் எமர்சன் அவரது டுவிட்டரில் கூறியுள்ளார்.

7.உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி, உலகின் நெ.1 ஆட்கொல்லி நோயாக இருப்பவை இதயநோய்கள் தான். ஆனால், அண்மையில் பிரபல மருத்துவ ஆய்வு இதழான, 'தி லான்செட்' வெளியிட்டுள்ள இரண்டு ஆய்வுக் கட்டுரைகளின்படி, புற்று நோய்கள் முதலிடத்தை பிடித்து உள்ளன.

6. 2022ல் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் வீரர்கள் தேர்வு தொடங்கியது. தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் முதற்கட்ட பரிசோதனை நிறைவடைந்திருப்பதாக பெங்களூருவில் நடந்த உடல்தகுதி சோதனையை புகைப்படத்துடன் விமானப்படை வெளியிட்டுள்ளது. தீவிரமான உடல்திறன் தேர்வு, மருத்துவம், மனோதிடம் உள்ளிட்ட சோதனைகள் நடந்தப்பட்டன. மொத்தம் 30 விண்வெளி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்காக ரஷ்யா அனுப்பப்பட உள்ளனர். இதிலிருந்து 3 பேர் மட்டும் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள்.

5.டில்லி மெட்ரோ ரயிலில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், பொது மக்களுடன் இணைந்து எளிமையாக பயணம் செய்ததார். இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

4.டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், 46 ஆசிரியர்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசிய நல் ஆசிரியர் விருதை வழங்கினார்.

3. அரசு பிளீடராக வி.ஜெயபிரகாஷ் நாராயணன் நியமனம் செய்து - தமிழக அரசு உத்தரவு
                   சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு அரசு பிளீடர் பதவி கடந்த ஆண்டு காலியானது. இதையடுத்து, பொறுப்பு அரசு பிளீடராக வி.ஜெயபிரகாஷ் நாராயணன் என்பவர் நியமிக்கப்பட்டார். தற்போது, அந்த பதவிக்கு அவரை நிரந்தரமாக நியமித்து தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2. தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய சிறை  திகார்

1. உலகில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் பாங்காக் நகருக்கு முதல் இடம்
                    சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக், தொடர்ச்சியாக 4-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்து உள்ளது.
2 மற்றும் 3-வது இடத்தை பாரீஸ் மற்றும் லண்டன் நகரங்களும,  நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை தென்கிழக்கு ஆசிய நகரங்களான சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் பிடித்து உள்ளன.
மேலும் நியூயார்க், இஸ்தான்புல், டோக்கியோ மற்றும் ஆந்தாலியா போன்ற நகரங்கள் அடுத்தடுத்த இடங்கள் என முதல் பத்து இடங்களில் இணைந்து உள்ளன.

Download Link-I | Link-II

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post