current affairs daily 7/9/2019


5. சீனாவின் ஜியாங்ஷி மாநிலத்தின் போ யாங் ஏரி சீனாவின் மிகப் பொிய நன்நீர் ஏரி என்ற பெயரைப் பெற்றுள்ளது.

4. ஒரே ஆண்டில் நான்கு உலகக் கோப்பை தங்கம் வென்ற இளம் நட்சத்திரங்கள் மானு-சௌரவ்
                    துப்பாக்கி  சுதலில் ஒரே ஆண்டில் 4 உலகக் கோப்பை தங்கம் வென்ற இந்தியாவின் இளம் நட்சத்திரங்களாக மானு பாக்கர் - சௌரவ் சௌதரி இணை விளங்குகின்றனா்.

3. பெண் குழந்தை திட்டத்திற்காக தமிழகத்திற்கு தேசிய விருது
           'பெண் குழந்தைகளை காப்போம்' திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, நாமக்கல், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு, மத்திய அரசின், தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
                              மத்திய அரசால், 2017 -- 18ம் ஆண்டில், 'பெண் குழந்தை களை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, சமூகநலத்துறை ஆகிய மூன்றும் இணைந்து, பெண் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு, பெண் குழந்தைகளை பெற்ற தம்பதியரை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் மூலம், 2018 -- 19ல் பெண் குழந்தை பிறப்பு விகிதம், 935 ஆக உயர்ந்தது. 

2.நியூசி., அணிக்கு எதிரான 3வது டி-20 போட்டியில், இலங்கை வீரர் மலிங்கா 4 பந்தில் 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி சாதனை படைத்தார்.

1. 'சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதை, 'இஸ்ரோ' தலைவர் சிவன் வெளியிட்டார்.
சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை காண,கர்நாடக மாநிலம், பெங்களூரு பீன்யாவிலுள்ள, 'இஸ்ரோ' கண்காணிப்பு மையத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதை காண்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு பெங்களூரு வந்தார். அவருடன், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 60 மாணவ - மாணவியரும்பெங்களூரு வந்தனர்.

Post a Comment

Thanks for your comment

أحدث أقدم