current affairs daily in tamil 2019 -27-9-2019

current affairs daily in tamil 2019 -27-9-2019


7. ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல்களை இந்திய கடற்படையில் சேர்க்க தீட்டப்பட்ட திட்டத்தின் படி பிரான்ஸ் நாட்டின் மாசாகான் டோக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 25,700 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்த த்தின் படி மொத்தம் 6 நீர்மூழ்கி கப்பல்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதில் முதல் கப்பலான ஐ.என்.எஸ். கல்வாரி கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
இதே போன்று மற்றொரு கப்பலான ஐ.என்.எஸ். கந்தேரி மும்பையில் நாளை நடைபெறும் விழாவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. இந்த விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று கப்பலை இந்திய கடற்படையில் இணைத்து வைக்க உள்ளார்.

6. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளா்.


5.பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி ராணுவ வீரர்களிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தியுள்ளார்.

4.இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே TDCM -1 Dubraj என்ற புதிய நெல் ரகத்தை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்
விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியதோடு வயலில் இறங்கி விதைத்து சாகுபடியைத் துவக்கி வைத்தார்.

3.அரசுப் பேருந்துகளை நவீனமாக்குவதற்கு கேஎஃப்டபிள்யூ (KfW) எனப்படும் ஜெர்மன் வங்கி தமிழகத்திற்கு ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடனுதவி அளிக்கிறது.

2.மத்தியக் கிழக்கு நாடான, இஸ்ரேலின் பிரதமராக, பெஞ்சமின் நெதன்யாகுவை நியமிப்பதாக, அதிபர்,ரேவன் ரிவ்லின் அறிவித்திருந்தார்.

1.வீடுகளை வாடகைக்கு விடுவோர், இரண்டு மாத வாடகையை மட்டுமே, முன்பணம் அல்லது வைப்புத் தொகையாக பெற வேண்டும்' என, மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post Navi

Post a Comment

0 Comments