நீதிக்கதை - பேராசையுள்ள பால்காரன்
ஒரு நதியின் ஒருபக்கம் செல்வம் மிகுந்த நகரமும்,மறுபக்கம் ஒரு செழிப்பான கிராமமும் இருந்தது. அந்தக் கிராமத்தில் ஒரு பால்க்காரன் இருந்தான். அவன் தன் பசுக்களிலிருந்து பாலைக் கறந்து படகின்மூலம் நதியைக்கடந்து நகரத்திற்க்குச் சென்று விற்பனை செய்வான். அவன் எப்படியாவது பணக்காரன் ஆகவேண்டும் என்று முடிவு செய்தான். எனவே பாலில் பாதித் தண்ணீா் கலந்து விற்றான். கொஞ்ச நாளில் பால்காரன் வீட்டில் ஒரு திருமண ஏற்பாடு நடந்தது. பால்காரன் நகரத்திற்குச் சென்று வியாபாாிகளிடம் பணத்தை வசூலித்துக் கொண்டு திருமணத்திற்கான பொருள்கள்,துணிமணிகள்,நகைகள் மற்றும் நிறைய சாமான்கள் வாங்கினான்.எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு படகின் மூலம் கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது நதியின் பாதிதூரம் வந்தபோது படகு பாறையில் மோதி பால்காரன் பொருட்கள் நதியில் பாதி விழுந்துவிட்டது. பால்காரன் அதிா்ச்சியால் மூா்ச்சையாகிவிட்டான். அச்சமயம் எங்கிருந்தோ ஒரு குரல் பலமாகக் கேட்டது.“பால்காரா!நீ மோசடியாக பாலில் பாதித்தண்ணீா் கலந்து விற்றாய்,அந்தத் தண்ணீாின் விலையுள்ள பாதிப் பொருட்கள் நதியின் தண்ணீரோடு போய்விட்டது போ!” என்றது அந்தக் குரல்.

நீதி : மோசம் செய்பவன் மோசம் போவான்
File Size : 29.25 MB
 Download Link 

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post