current affairs and gk daily 17-1-2020

current affairs and gk daily 17-1-2020


5. UAPA - Unlawful Activities (Prevention) Act- சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 அல்லது உபா சட்டம் (Unlawful Activities (Prevention) Act (UAPA), 

சட்டத்தின் செயல்பாடுகள்[தொகு]

இந்தச் சட்டத்தின் பிரிவு 35-ன் படி அரசு நினைத்தால் எந்த ஒரு இயக்கத்தையும் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்க முடியும். அவ்வாறு அறிவித்தால், அந்த இயக்கத்தில் அதுவரை உறுப்பினர்களாக இருந்த அனைவரும், தீவிரவாதிகளாகவே கருதப்படுவார்கள்.
அரசால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தாலோ, அந்த இயக்கத்தின் வெளியீடுகளை வீட்டில் வைத்திருந்தாலோ கூட இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைதுசெய்ய முடியும்.
இந்தச் சட்டத்தின் பிரிவு 43-ன் படி, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு அதிகபட்சமாக 30 நாட்கள் வரை போலீஸ் காவல் வழங்க முடியும். அதிகபட்சமாக ஒரு நபரை 90 நாட்கள் வரை எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்ற காவலில் வைக்க முடியும். அதேபோல், 180 நாட்கள் வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் ஒருவரை சிறையில் அடைத்து வைத்திருக்க முடியும்.
இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபர், எந்த நீதிமன்றத்திலும் முன்ஜாமீன் பெற முடியாது. அதேபோல் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் பிரிவு 43-ன் படி, ஜாமீனில் வெளியே வருவது இயலாத காரியம். இந்தச்க் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் அதற்காக அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள். இந்த நீதிமன்ற நடவடிக்கையை பொதுமக்களோ, பத்திரிகையாளர்களோ பார்ப்பதற்கு அனுமதியில்லை.
உபா சட்டத்தில் 2004, 2008 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.


4.   இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள்

3. இந்திய சுதந்திரத்தின், 75ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், 2022ல், 'இஸ்ரோ' எனப்படும், இந்திய வின்வெளி ஆய்வு மையத்தின் சார்பில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான் திட்டம்' செயலில் உள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தில், 'பாகுபலி ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3' என்ற விண்கலம், விண்வெளி வீரர்களை அழைத்து செல்கிறது. இந்த விண்வெளி பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, நான்கு வீரர்கள், ரஷ்யாவில், 11 மாதங்கள் பயிற்சி பெற உள்ளனர்.


2. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'ஜிசாட் - 30' செயற்கைக்கோள்-

இந்தியாவின் 'தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான, 'ஜிசாட் - 30' செயற்கைக்கோள், இன்று(ஜன.,17) அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.3,357 கிலோ எடையுள்ள, ஜிசாட் - 30 செயற்கைக்கோள் ஜிசாட்-30 செயற்கைக்கோள், 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1.கேரளாவை தொடர்ந்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Post Navi

Post a Comment

0 Comments