current affairs and gk daily 20-1-2020

current affairs and gk daily 20-1-2020


6.

55 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்

5.பாஜக தேசிய தலைவராக ஜகத் பிரகாஷ் நட்டா போட்டியின்றி தேர்வு

4.தூத்துக்குடியில் ரூ.40,000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் - தமிழக அமைச்சரவை ஒப்புதல்

3. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில், இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா முதல் இரு இடங்களை பிடித்துள்ளனர்.

2. தஞ்சையில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் சுகோய் 30 எம்.கே.ஐ. ரகத்தை சேர்ந்த 6 போர் விமானங்கள் இன்று இணைக்கப்பட்டன.

இந்தியாவில் 70 சதவீத ஏழைகளின் சொத்து மதிப்பை விட, 1 சதவீத பணக்காரர்களின் சொத்து மதிப்பு, 4 மடங்கு அதிகம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள தவோஸ் நகரத்தில் உலக பொருளாதார மன்றத்தின் (WEF) 50வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முன்பாக, ஆக்ஸ்பாம் உரிமைகள் குழு சார்பில் 'டைம் டு கேர்' என்ற ஆய்வு வெளியிடப்பட்டது.

ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகின் 2,153 கோடீஸ்வரர்கள், 460 கோடி (உலக மக்கள் தொகையின் 60 சதவீதம்) மக்களை விட அதிகமான சொத்துமதிப்பை கொண்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில், 63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, 2018-19ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கிய ரூ.24.42 லட்சம் கோடி மதிப்பை விட அதிகம்.

1. 2020 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விருதுகளை, தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (ஜன.,20) வழங்கினார்.

விருது பெற்றவர்கள் விபரம் :

திருவள்ளுவர் விருது - நித்யானந்த பாரதி
தந்தை பெரியா விருது (2019) - செஞ்சி.ந.ராமச்சந்திரன்
அண்ணல் அம்பேத்கர் விருது(2019) - க.அருச்சுனன்
பேரறிஞர் அண்ணா விருது - கோ.சமரசம்
பெருந்தலைவர் காமராசர் விருது - முனைவர் மா.சு.மதிவாணன்
சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருது :
தமிழ்தாய் விருது (2019) - சிகாகோ தமிழ்ச் சங்கம்
கம்பர் விருது - முனைவர் சரசுவதி ராமநாதன்
சொல்லின் செல்வர் விருது - சிந்தனை கவிஞர் முனைவர் கவிதாசன்

ஜி.யு.போப் விருது - மரிய ஜோசப் சேவியர்
உமறுப்புலவர் விருது - லியாகத் அலிகான்
இளங்கோவடிகள் விருது - கவிக்கோ ஞானச்செல்வன்
அம்மா இலக்கிய விருது - உமையாள் முத்து
சிங்கார வேலர் விருது - அசோகா சுப்பிரமணியன்
மறைமலை அடிகளார் விருது - முத்துக்குமாரசுவாமி
மகாகவி பாரதியார் விருது - முனைவர் ப.சிவாஜி
பாவேந்தர் பாரதிதாசன் விருது - தேனிசை செல்லப்பா
Post Navi

Post a Comment

0 Comments