current affairs and gk daily 22-1-2020

current affairs and gk daily 22-1-2020



6. இந்தியாவின், 71வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக, பிரேசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ பங்கேற்க உள்ளார். இதற்காக, வரும், 24ம் தேதி டில்லி வரும் அவர், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். அவருக்கு, 25ம் தேதி, ராம்நாத் கோவிந்த் விருந்து அளிக்கிறார்.

5. அசாமின் கவுகாத்தியில் ‘கேலோ’ இந்தியா யூத் விளையாட்டு நடக்கிறது. நேற்று நடந்த 21 வயது ஆண்கள் 50 மீ., நீச்சல், ‘பிரஸ்ட்ஸ்டிரோக்’ பிரிவில் தமிழக வீரர் தனுஷ், 28.95 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். ஏற்கனவே 100 மீ., பிரிவில் அசத்திய தனுஷிற்கு, இது இரண்டாவது தங்கப்பதக்கமாக அமைந்தது.

4. இந்தியா - பாக்., இடையேயான காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கு உதவ தயாராக உள்ளதாக அ மெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

3. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துள்ள சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

2. புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அதிகம் பேசுபவர்கள், முட்டாள்களின் வாரிசுகளாகவே இருக்க முடியும், என சர்ச்சைக்குரிய வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும், 'தாவோஸ்-2020' உலகப் பொருளாதார மன்றத்தின், 50வது கூட்டத்தில், 'புவி வெப்பமயமாதல்' குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதில், காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் பேசியதாவது: நம் வீடு (பூமி) இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது. நாங்கள் சுற்றுச்சூழலைக் காக்கப் போராடி வருகிறோம்.
 நம் வீடு எரிந்துகொண்டிருப்பதாக, கிரேட்டா தன்பெர்க் கூறுவதைக் கேட்க எனக்கு நேரமில்லை. புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அதிகம் பேசுபவர்கள், முட்டாள்களின் வாரிசுகளாகவே இருக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.



1. சந்திரயான் 3 பணிகள் துவங்கப்பட்டு, முழு வீச்சில் நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.சந்திரயான் 3 திட்டத்திற்காக 4 விண்வெளி வீரர்கள் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இம்மாத இறுதியில் ரஷ்யா செல்ல உள்ளனர். 1984 ல் ராகேஷ் சர்மா ரஷ்ய விண்கலத்தில் பறந்தார். ஆனால் இம்முறை, இந்தியாவில் இருந்து தயாரிக்கப்படும் இந்திய விண்கலத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் பறக்க உள்ளனர் என்றார். தொடர்ந்து மனிதர்களை நிலவுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளும் ஏவுகணையை இஸ்ரோ அனுப்புமா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கண்டிப்பாக ஒருநாள் அனுப்பப்படும். ஆனால் உடனடியாக அல்ல என்றார்.
Post Navi

إرسال تعليق

0 تعليقات