current affairs and gk daily 23-1-2020

tnpsc group 1, group-2, group-4 exam current affairs and gk in tamil 


8. சீனாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அங்கு நடக்கவிருந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட சார்ஸ் வைரஸ்சின் வகையான கரோனா வைரஸ் சீன மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. 

7.  கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 33 ஆயிரம் பேர் தற்கொலைக்கு முயன்றிருப்பதை தமிழகம் முழுவதும் உள்ள 80 அரசு மருத்துவமனைகளில் இருந்து கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அவர்களது பெயர் விவரங்களை சேகரித்துள்ளனர்.

இதில் தவறான தொடர்பு காரணமாக ஏற்பட்ட தகராறில் உயிரை முடித்துக் கொள்ள விஷம் அருந்தியவர்கள், தூக்கிட்டு கொண்டவர்கள் முதல் இடத்தையும், கடுமையான மன உளைச்சல், பணி நெருக்கடியால் தகவல் தொழில் நுட்ப ஊழியர்களும், கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சனை காரணமாகவும் அதிக அளவில் தற்கொலை முடிவை தேடிச்செல்வது கண்டறியப்பட்டது.

6.காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிட அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு மீண்டும் இந்தியா திட்டவட்டமாக பதிலளித்துள்ளது.

5.கொடிய ஆட்கொல்லி வைரசான கொரோனாவைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருவதை அடுத்து, வுஹன் நகருக்கு செல்ல சீன அரசு தடை விதித்துள்ளது.

4. ஐரோப்பிய நாடான கிரீசின் முதல் பெண் அதிபராக ஏகதெரினி சகெல்ரோபவுலு 63, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Greece,president,Sakellaropoulou,Katerina_Sakellaropoulou,first_woman_president, கிரீஸ், அதிபர்

3.2020-ம் ஆண்டின் பிரகதி எனப்படும் முதல் ஆய்வு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று டில்லியில் நடந்தது. இதில் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

2. மும்பையில் உள்ள 'மால்'கள், தியேட்டர்கள், உணவகங்கள் ஆகியவை, வரும், 27ம் தேதி முதல், 24 மணிநேரமும் செயல்பட, மஹாராஷ்டிர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

1. ஆமதாபாத் - மும்பை இடையிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்றதால், பயணியர் அனைவருக்கும், தலா ரூ.100 இழப்பீடு வழங்கப்படும் என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.


Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post