tnpsc current affairs and gk daily 30-1-2020
tnpsc group 1, group-2, group-4 exam current affairs and gk in tamil

12. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் - தயானந்த சரஸ்வதி
11. நாளைமறுநாள் ( பிப்.1 ம் தேதி) தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் கல்வி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என பல்கலை., மானியகுழு கமிஷன் சேர்மன் டி.பி.சிங் வலியுறுத்தி உள்ளார்.
10. மகாத்மா காந்தியின் 73வது நினைவு தினத்தை முன்னிட்டு டில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
9. சர்வதேச தொழில் முனைவோருக்கான கூட்டமைப்பு சார்பில், ரத்தன் டாடாவிற்கு TIEcon ன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. டாட்டாவிற்கு விருதை வழங்கிய நாராயணமுர்த்தி அவரது காலில் விழுந்து ஆசிபெற்றார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரத்தன் டாடா, நாராயணமூர்த்தியின் செயல்பாடு தன்னை நெகிழச் செய்து விட்டதாகவும், அவரது கையால் விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
8. இன்போசிஸ் நிறுவனரான நாராயணமூர்த்தி, மேடையில் அனைவரின் முன்னிலையில், நாட்டின் முன்னணித் தொழிலதிபர்களில் ஒருவரும், பல ஆண்டு கால நண்பருமான ரத்தன் டாடாவின் காலில் விழுந்து ஆசிபெற்ற காட்சி, இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
7. இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் பார்லி.,யில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் பார்லி., தலைவர் டேவிட் மரியா சசோலிக்கு இந்திய லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த வாரம் அனுப்பிய கடிதத்தில், 'ஒரு நாட்டின் பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்து, இன்னொரு நாட்டின் பார்லி., தீர்ப்பளிப்பது பொருத்தமற்றது எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ஜனநாயக நாடுகளில், ஒரு நாட்டின் எம்.பி.க்கள், மற்றொரு நாட்டின் பார்லி.,யின் இறையாண்மை முறையை மதிக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
6. மசூதிகளில் தொழுகைக்காக பெண்கள் நுழைய இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
5.பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் நாளை (ஜன.,31) காலை 11 மணிக்கு துவங்குகிறது. இந்த கூட்டத் தொடர் 2 பகுதிகளாக நடத்தப்பட உள்ளது.
4. பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது பேசிய பிரதமர் மோடி, பார்லி.,யின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அனைத்து விவகாரங்கள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்க அரசு தயாராக உள்ளது. பெரும்பாலான உறுப்பினர்கள் நாட்டின் பொருளாதார சூழல் குறித்து பேச வேண்டும் என கேட்டுள்ளனர். இதனை நான் வரவேற்கிறேன். பொருளாதார பிரச்னைகள் குறித்த விவாதங்களும், உங்களின் ஆலோசனைகளும் நிச்சயம் தேவை.
3.இலங்கை பிரதமர் மகிந்தா ராஜ பக்ஷே 5 நாள் பயணமாக இந்தியா வருகிறார்.பிரதமராக மகிந்தாராஜபக்ஷே தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் வரும் பிப்., 7 ம் தேதி முதல் 11 ம் தேதி வரையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற் கொள்ள உள்ளார். சுற்றுப்பயணத்தின் போது அவர் பல்வேறு தலைவர்களை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சாரநாத், புத்தகயா மற்றும் திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்ல உள்ளார்.
2.சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இது முதல் பாஸிட்டிவ் ரிப்போர்ட் ஆகும்.
0 Comments
Thanks for your comment