current affairs daily 18-2-2020 - tnpsc exams

tnpsc current affairs and gk daily 18-2-2020


tnpsc group 1, group-2, group-4 exam current affairs and gk in tamil

12. ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரை நடத்த இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.ஹெச்.,) சார்பில் ஆண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் ஐரோப்பா (6 அணிகள்), ஆசியா (4), ஆப்ரிக்கா (2), ஓசியானா (2), பான் அமெரிக்கா (2) கண்டங்களில் இருந்து அணிகள் பங்கேற்கும். கடைசியாக 2016ல் லக்னோவில் நடத்தப்பட்டது. இதில் இந்தியா கோப்பை வென்றது.இந்நிலையில் அடுத்த ஆண்டு இத்தொடரை நடத்த மீண்டும் இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி, இடம் பின்னர் அறிவிக்கப்படும். கடந்த 2018ல் சீனியர் ஆண்களுக்கான உலக கோப்பை தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடத்தப்பட்டது. எனவே இத்தொடர் இங்கு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

11. பெண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் அடுத்த ஆண்டு 2021 -ல் தென் ஆப்ரிக்காவில் நடக்கவுள்ளது.

10.
கோவிட்-19 வைரஸ்: 39 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன நாவல்கோவிட்-19 வைரஸை போல ஒரு உயிர்கொல்லி வைரஸ் பற்றி டீன் கூன்ட்ஸ் எழுதிய 'தி அய்ஸ் ஆப் டார்க்னஸ்' (The Eyes of Darkness) என்ற கற்பனையான திகில் நாவலில் கூறப்பட்டுள்ளது. 1981ல் வெளியான இந்த நாவலில், சீன ராணுவ ஆய்வகம், போர்க்காலத்தில் உயிரியல் ஆயுதமாக (பயோ வெப்பன்) பயன்படுத்த புதிய வைரஸ் தயாரிப்பில் ஈடுபட்டு, 'வூஹான்-400' என்ற உயிர்கொல்லி வைரஸை உருவாக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்த வைரஸ் மனிதர்களை மட்டுமே பாதிப்பதாகவும் எழுதப்பட்டுள்ளது.

9.இந்திய மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்த பிரிட்டன் எம்.பி., டெபி ஆப்ரகாம்ஸ், துபாயில் இருந்து நேற்று இந்தியாவுக்கு வந்தார். எனினும், விமான நிலையத்தில், அவரிடம் முறையான, 'விசா' இல்லை எனக் கூறிய அதிகாரிகள், அவரை இந்தியாவிற்குள் அனுமதிக்காமல், திருப்பி அனுப்பினர்.கடந்த ஆண்டு, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவை நீக்கி, மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் உள்ள தொழிலாளர் கட்சி எம்.பி., டெபி ஆப்ரகாம்ஸ், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரிட்டன் பார்லிமென்டில், காஷ்மீர் விவகார ஆலோசனை குழு தலைவராக இருக்கும் அவர், மத்திய பா.ஜ., அரசின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை துபாயில் இருந்து, டில்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆப்ரகாம்சை அனுமதிக்க மறுத்த அதிகாரிகள், அவரின், 'இ-விசா' ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, அவர் துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
8. பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல்., எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட், இந்திய விமானப்படைக்கு, 83 தேஜஸ் போர் விமானங்களை, 39 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தயாரித்து வழங்குவது என, முடிவு செய்துள்ளது.

7. ஜம்மு - காஷ்மீருக்கென, ராணுவத்தில் தனியாக ஒரு படைப் பிரிவு உருவாக்கப்படும்,'' என, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கூறினார்.

6.

ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்சில், 'டென்னிஸ்' புயல், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. வலுவடைந்து வரும் அந்தப் புயலால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


5. 

அசாமில் உள்ள உள்நாட்டு மக்களை கண்டறிய, 1951ம் ஆண்டை, கடைசி வருடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து உள்ளே நுழையும் மக்களுக்கு, ஐ.எல்.பி., எனப்படும், உள்நாட்டு நுழைவு அனுமதி சீட்டு வழங்கப்பட வேண்டும் என்றும், பரிந்துரைத்தது.

4. பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் நிதி உதவி அளித்து வருவதை அடுத்து எப்.ஏ.டி.எப். எனப்படும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான அமைப்பு பாக்.கை 'கிரே' பட்டியலில் வைத்து கடந்த 2018ல் உத்தரவிட்டது. இதனால் சர்வதேச நிதியம் உலக வங்கி ஆகியவற்றில் இருந்து பாக். நிதி உதவி பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.எப்.ஏ.டி.எப். அமைப்பின் கூட்டம் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன் தினம்(பிப்.,16) துவங்கி பிப்.,21 வரை நடைபெறுகிறது. எப்.ஏ.டி.எப். விதித்த 27 நிபந்தனைகளில் 14 நிபந்தனைகளை மட்டுமே பாக். நிறைவேற்றி உள்ளதால் அது கிரே பட்டியலில் தொடர்வதையே பல நாடுகளும் வலியுறுத்தும் என நிபுணர்கள் கருத்து தெரித்துள்ளனர்.

3.
டாமன் - டையூ மற்றும் தாத்ரா - நாகர் ஹவேலி ஆகியவற்றை ஒரே யூனியன் பிரதேசமாக இணைத்து, மத்திய அரசு பார்லிமென்டில் சட்டம் நிறைவேற்றியுள்ளது.

2.

சச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது 2011 உலககோப்பை வெற்றியை தொடர்ந்து, இந்திய வீரர்கள், சச்சினை தோளில் சுமந்து சென்ற நிகழ்வு, சிறந்த தருணமாக தேர்வு செய்யப்பட்டு லாரியஸ் விருதுக்கு வழங்கப்பட்டது.

2019ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருது கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் கார் ரேஸ் வீரர் ஹாமில்டோனுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. 2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வென்ற பின், வீரர்கள் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது. ஜெர்மனியில் நடந்த விருது வழங்கும் விழாவில் சச்சின் அதை பெற்றுக் கொண்டார்.



சிறந்த அணிக்கான விருது, தென் ஆப்ரிக்கா ரக்பி அணிக்கு வழங்கப்பட்டது. சிறந்த வீராங்கனையாக அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ் வென்றார்.





1. ஆன்டிகொலிஜியம் டிசைவர் என்பது -இரயில்கள் நேருக்கு நேர் மோதாமல் தடுக்க உதவும் இரயிலில் பொருத்தப்படும் ஒரு கருவி

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post