current affairs daily 20-2-2020 - tnpsc group-1 exams


tnpsc current affairs and gk daily 20-2-2020


tnpsc group 1, group-2, group-4 exam current affairs and gk in tamil



1. மும்பையை தொடர்ந்து, திருவனந்தபுரம் நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் ,24 மணி நேரமும் வர்த்தக நிறுவனங்கள் செயல்படும் சிறப்பு பகுதிகள் அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
2. கணவரை இழந்த ஓராண்டுக்குள் ராணுவத்தில் இணைந்த வீரமங்கை-  நிகிதா கவுல்
3. தேச விரோத செயல்களில் ஈடுபடும் யாராக இருந்தாலும், மரணத்தை சந்திக்க நேரிடும் என .பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
4. வளர்ந்து வரும் நாடுகளின் 100 சிறந்த பல்கலைகள் பட்டியலில் இந்தியாவின் 11 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. முதல் 100 இடங்களில் அதிகபட்சமாக சீனாவைச் சேர்ந்த 30 பல்கலைகள் இடம்பிடித்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவைச் சேர்ந்த 11 கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. அதில் ..எஸ்சி. எனப்படும் இந்திய அறிவியல் நிறுவனம் 16வது இடத்தைப் பிடித்துள்ளது.
5. நீண்ட போராட்டம், 3 பிரதமர்கள் மாற்றம், மீண்டும் தேர்தல் என பல்வேறு பிரச்னைகளுக்குப்பிறகு ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியுள்ளது. இந்நிலையில், பிரிட்டனுக்கு வருவோர் விசா பெற புதிய விதிகள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன.  
பிரிட்டன் உள்துறை செயலர் பிரீத்தி படேல் கூறியதாவதுபிரிட்டனுக்கு வர விரும்புவோரின் செயல்திறன், தகுதி, தொழில், சம்பளம், ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் புள்ளிகள் வழங்கப்படும். 70 புள்ளிகள் பெற்றால் மட்டுமே, பிரிட்டன் விசா கிடைக்கும். இந்த புதிய விதிகள் 2021ம் ஆண்டு ஜனவரி, 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்,” என்றார்.
6. ''குறைந்த காலத்தில், அதிக மகசூல் பெறுவதற்காக பயன்படுத்தப்படும் வீரியமான உரங்களை விட, மனித கழிவுகளில் இருந்து கிடைக்கும் உரமே மகத்தானது,'' என்கிறார், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மூத்த ஆலோசகராக பணிபுரிந்தவரும்,ஊட்டச்சத்து விஞ்ஞானியுமான டாக்டர் .அப்துல் ரகுமான்.
7. அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த நிலையில் உள்ள, கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, தமிழரான ஸ்ரீ ஸ்ரீநிவாசன், 52, நியமிக்கப்பட்டுள்ளார்.
8. டில்லி ராஜ்பாதை சாலையில், மத்திய சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சகம் சார்பில் 'ஹுனா் ஹாட்' என்னும் கைவினை பொருட்காட்சி பிப் 13ம் தேதி முதல் நடந்து வருகிறது.மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் ராஜ்பாதை பகுதிக்கு திடீரென விசிட் அடித்தார்.


பொருட்காட்சியை 50 நிமிடம் பார்வையிட்ட பின்னர் பொருட்காட்சி அரங்கில் உள்ள பாரம்பரிய உணவக அரங்கத்திற்கு சென்ற மோடி, பீஹார், .பி., ஜார்க்கண்ட் மாநில மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் 'லிட்டி சோஹா' எனப்படும் ஒருவகை உணவையும், 'குல்ஹாத் சாய்' எனப்படும் ஒரு வகை தேனீரும் அருந்தினார்.
9. இந்தியாவிற்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் பிரத்யேக கார் (தி பீஸ்ட்), இந்தியா வரவுள்ளது. அவர் வரவிருக்கும் 'ஏர்போர்ஸ் ஒன்' விமானம் மற்றும் 'தி பீஸ்ட்' காரில் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவையாக உள்ளன.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post