பள்ளிகளுக்கு மின் சப்ளை ஆய்வு செய்ய அறிவுரை

பள்ளிகளுக்கு மின் சப்ளை ஆய்வு செய்ய அறிவுரை / Electrical Supply to Schools: Advice to Study



பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளதால், பள்ளிகளுக்கான மின்சாரம் செல்லும் வழித்தடங்களில், தொடர்ந்து ஆய்வு செய்யும்படி, பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், இரு வாரங்களில் துவங்க உள்ளன. கோடை காலத்தில், வழக்கத்தை விட, மின் தேவை அதிகம் இருக்கும். 

அதனால், 'ஓவர் லோடு' காரணமாக, மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டு, மின் தடை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.இதையடுத்து, பள்ளிகளுக்கு தடையில்லாமல் மின் சப்ளை செய்வதை ஆய்வு செய்யும்படி, பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல இடங்களில், பள்ளிகளுக்கு மின்சாரம் செல்லும் கம்பங்கள் சேதமடைந்து இருப்பதாகவும், தரைக்கு அடியில் உள்ள, 'கேபிள்' வெளியில் தெரிவதாகவும் புகார்கள் வருகின்றன. எனவே, பிரிவு அலுவலக பொறியாளர்கள், தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு, மின்சார வழித்தடங்களில் ஆய்வு செய்து, தடையில்லாமல் மின் சப்ளை செய்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Post Navi

Post a Comment

0 Comments