Jio Fibre அம்பானியின் அடுத்த அதிரடி Offer

(Technology News, Reliance Jio Offers)

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, குறைந்த செலவிலான
அல்லது அறிமுகத்தை முன்னிட்டு முற்றிலும் இலவசமான அதன் ஃபைபர் பிராட்பேண்ட் நெட்வொர்க் ஆன ஜியோஃபைபர் திட்டத்தை தொடங்கும் அந்த நாள் முதல் - இந்தியாவில் டேட்டா நுகரப்படும் வழிமுறையே மாற்றியமைக்கப்படும் என்பதில் சந்தேகமேயில்லை. அதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை தான்.

நுழைவிலேயே இந்திய டெலிகாம் துறைக்குள் புரட்சியை உண்டாக்கிய ஜியோவானது, அதன் அறிமுகத்தின் போது தொடர்ச்சியாக ஆறு மாத காலத்திற்க்கு இலவச 4ஜி சேவையை வழங்கி மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது. உடன் அந்த காலகட்டத்தில் 1ஜிபி அளவிலான டேட்டாவை பயன்படுத்தும் பழக்கத்தையும் ஜியோ திணித்தது.
மூலம் : டெலிகாம்இன்ஃபோ.காம்

அதேபோன்றதொரு டேட்டா நுகரும் பழக்கத்தை - வேறொரு பாணியில், இன்னும் பரந்த நிலைப்பாட்டில் - மீண்டும் திணிக்க முகேஷ் அம்பானி தலைமையிலான குழு திட்டமிட்டுள்ளது. ஆம், 4ஜி கட்டண திட்டங்களை அறிமுகம் செய்து, திருத்தி அமைத்து ஜியோவிற்கு 'போர்' அடித்து விட்டது போலும்.
அறிமுகமாவுள்ளது ஜியோ நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவையான ஜியோபைபர் (JioFiber) 4ஜி சேவையை போலவே துவக்கத்திலேயே பார்தி ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற பிராட்பேண்ட் சேவையை இடையூறு செய்யும், பின்னர் ஒட்டுமொத்த பிராட்பேண்ட் துறையையும் 'தன்னை' பின்பற்ற வைக்கும்.
வெளியான தகவலின்படி ஜியோபைபர் ஆனது அதிவேக தரவை, அதாவது 1ஜிபிபிஎஸ் வரையிலான தரவு வேகத்துடன் கூடிய அதிவேக பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும். இருப்பினும், இந்த சேவையின் அதிகாரப்பூர்வ தொடக்க தேதி இன்னமும் தெரியவில்லை.

ஆனால் ஜியோபைபர் சேவையானது இந்த காலாண்டின் இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்பதை வெளியான எல்லா அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. ஜியோ ஏற்கனவே அதன் ஜியோபைபர் சேவைகளுக்கான சோதனையை 10 நகரங்களில் - மும்பை, டெல்லி என்.சி.ஆர், அஹமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா போன்ற நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நிகழ்த்தி வருகிறது.
சமீபத்தில் ஹைதராபாத்திலும் கூட, இந்த சோதனை நடப்பதாக அறியப்பட்டது. அங்கு தான் ஜியோபைபர் ப்ரீவியூ ஆபர் பற்றிய விவரம் வெளியானது. அந்த சலுகையானது, பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 100ஜிபி அளவிலான இலவச தரவுகளை அனுபவிக்க உதவும்.
இன்றோ, நாளையோ கூட ஜியோபைபர் அறிமுகமானாலும் கூட, முதல் மூன்று ம்,மாதங்களுக்கான இலவச பிராட்பேண்ட் சேவை கிடைக்கும் என்பது மட்டும் உறுதி.அதை ஜியோவும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இன்னும் கூடுதல் சுவாரசியம் என்னவனில், அறிமுகத்திற்கு பின்னர் மூன்று மாதம் என்கிற இலவச சேவையானது நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

குறிப்பிட்ட இலவச சலுகை காலம் காலம் முடிவடைந்தவுடன் கட்டண சேவை தொடங்கும். அந்த சேவையின் கீழ் 600 ஜிபி அளவிலான டேட்டா ரூ.500/-க்கும் மற்றும் 1000 ஜிபி அளவிலான டேட்டா ரூ.2000/-க்கும் கிடைக்குமெநிக்கிறது சமீபத்தில் வெளியானதொரு அறிக்கை.
ஜியோபைபர் திட்டங்கள் கசிவது ஒன்றும் முதல் முறையல்ல, முன்னதாகவே கசிந்துள்ளன., ஆனால் இவைகளை இறுதி திட்டங்களாக கருதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சற்று கூடுதல் விலை நிர்ணயம் பெறலாம் அல்லது இன்னும் மலிவாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது.ஆனால் மிக நிச்சயாமாக தற்போது சந்தையில் கிடைக்கும் பிராண்ட்பேண்ட் சேவைகளை விட மிக குறைவான விலையில், அதிக அளவிலான தரவு விகிதங்கள் கொண்டிருக்கும். கூடுதலாக, ரிலையன்ஸ் ஜியோ அதன் டிவி சேவையையும் பிராட்பேண்ட் தொகுப்புடன் இணைத்தே வழங்க திட்டமிட்டுள்ளது.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post