கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி நடைப்பெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்-2ஏ தேர்வு முடிவுகள் அதிகாரபூர்வ அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 06.08.2017 அன்று 1953 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக (நேர்முகத் தேர்வு அல்லாத) ஒருங்கிணைந்த குடிமைப் பணிக்கான குரூப்-2ஏ தேர்வை நடத்தியது. அதில் பங்குப் பெற்ற 5,56,189 விண்ணப்பதாரர்களில் 5,56,136 தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை , வகுப்பு வாரியான தரவரிசை நிலை , சிறப்புப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலை ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தங்களது தரவரிசை நிலை ஆகியவற்றைப் பற்றியும் தெரிந்துகொள்ள இந்த இணையதளத்தில் தங்களது தேர்வு பதிவு எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித் தகுதி, தொழில்நுட்பக் கல்வி தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையிலும் தரவரிசை நிலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி தேர்வில் கலந்துகொண்டு, இப்பதவிக்கான அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாதவர்களின் மதிப்பெண்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments
Thanks for your comment