ஸ்மார்ட் கார்டு பிழை திருத்தம் - இணையதள வசதி மீண்டும் துவக்கம் | Smart card error correction - Internet facility to re-launch
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பிழை திருத்தம் உள்ளிட்ட பணிகளை 'www.tnpds.gov.in' என்ற, இணையதளம் வாயிலாக, மேற்கொள்ளும் வசதியை 2017ல் உணவு துறை துவக்கியது. சிலர், வேண்டுமென்றே தவறான தகவல்களை பதிவு செய்ததால், இணையதளம் வாயிலாக மேற்கொள்ளும் பணிகள் தற்காலிமாக நிறுத்தப்பட்டன.
இதுகுறித்து உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்மார்ட் கார்டுக்காக, மக்களிடம் வாங்கிய 'ஆதார்' விபரத்தில், புகைப்படம் தெளிவாக இல்லை. இதனால், சரியான புகைப்படத்தை, இணையதளம் வாயிலாகவும், பதிவேற்றம் செய்யலாம் என மக்களிடம் அறிவுறுத்தப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி சிலர், நடிகர், நடிகையர் படங்களை வேண்டுமென்றே தவறாக பதிவிட்டனர். இதனால் இணையதளத்தில், திருத்தம் மேற்கொள்ளும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது, ஸ்மார்ட் கார்டு பணி முடியும் தருவாயில் உள்ளதால், மீண்டும் இணையதள திருத்தம் வசதி துவக்கப்பட்டுள்ளது, என்றார்.
0 تعليقات
Thanks for your comment