பிளஸ் 1 தமிழ் 2ம் தாள் ஈசி | Plus One Tamil 2 paper Easy
முதல் நாளில், தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதில், வினாக்கள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். ஒரு மதிப்பெண் கேள்வியில், ஐந்துக்கும் மேற்பட்டவை கடினமாக இருந்ததால், 'சென்டம்' எடுக்க முடியாது என்றும் கூறினர்.இந்நிலையில், தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது. 'வினாத்தாள் எளிமையாக இருந்தது. எதிர்பார்த்த கேள்விகள் இடம் பெற்றதால், பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்தோம்' என, மாணவர்கள் கூறினர். நேற்றைய தேர்வில், மாநிலம் முழுவதும் பறக்கும் படை நடத்திய சோதனையில், எந்த மாணவரும் காப்பியடித்த புகாரில் பிடிபடவில்லை.
0 تعليقات
Thanks for your comment