சட்ட நுழைவுத் தேர்வு

சட்டத் துறையில் வல்லுனராக விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய, ‘காமன் லா அட்மிஷன் டெஸ்ட்’ (கிளாட்) எனும் நுழைவுத் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!
நாடு முழுவதும் செயல்படும், 19 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு சட்டக்கல்லூரிகளில், சேர்க்கை பெறுவதற்கு, இந்த நுழைவுத் தேர்வை எழுதுவது அவசியம்.
இளநிலை பட்டப்படிப்புகள்: ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எல்எல்.பி., சட்டப் படிப்புகள் - பி.ஏ.எல்எல்.பி., பி.எஸ்சி.எல்எல்.பி., மற்றும் பி.காம்.எல்எல்.பி.,
தகுதிகள்: பிளஸ் 2வில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள், 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் போதுமானது. தற்போது பிளஸ் 2 படிக்கும், மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
முதுநிலை பட்டப்படிப்பு: எல்எல்.எம்.,
தகுதிகள்: குறைந்தது 55 சதவீத மதிப்பெண் தேர்ச்சியுடன் எல்எல்.பி., அல்லது ஏதேனும் ஒரு சட்ட பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31
விபரங்களுக்கு: www.clat.ac.in

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post