பெல் நிறுவனத்தில் இன்ஜினியர் பணி
last Date: 2018 March 4

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்பது அடிப்படையில், நமது பாதுகாப்புப் படைகளின் எலக்ட்ரானிக்ஸ் தேவைகளை நிறைவேற்றுவதற்காக நிறுவப்பட்டது.
பின் இதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு பல்வேறு பிரிவுகளிலும் இந்த பெல் நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இங்கு காலியாக உள்ள 30 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் ; பொதுப் பிரிவுக்கு 15, ஓ.பி.சி., பிரிவுக்கு 8, எஸ்.சி., பிரிவுக்கு 5, எஸ்.டி., பிரிவுக்கு 2ம் சேர்த்து மொத்தம் 30 இடங்கள் காலியாக உள்ளன.

வயது : 2018 பிப்., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஓ.பி.சி., பிரிவினர் 28 வயது வரையிலும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 30 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : பி.இ., பி.டெக்., ஏ.எம்.ஐ.இ., ஜி.ஐ.இ.டி.இ., போன்ற ஏதாவது ஒரு படிப்பை எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் 04.03.2018 அன்று பின்வரும் முகவரியில் நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கு நேரடியாக பங்குபெற வேண்டும்.
Sanskriti Government Model Senior Secondary School Sector 20 Panchkula, Chandigarh.

கடைசி நாள் : 2018 மார்ச் 4.

விபரங்களுக்கு : www.bel-india.com

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post