RASHTRIYA CHEMICALS AND FERTILIZERS LIMITED என்பது இந்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கும் வேதிப்பொருட்கள் மற்றும் உரம் தயாரிக்கும் நிறுவனம். இதன் ஆலை மும்பைக்கு அருகிலுள்ள ராய்காட் மாவட்டத்தில் உள்ளது. இங்கு காலியாக உள்ள 154 டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகள்: வெல்டர், எலக்ட்ரீசியன், கெமிக்கல் பிளாண்ட் மெயின்டனென்ஸ் மெக்கானிக், பாய்லர் அட்டெண்டன்ட், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மெடிக்கல் லேபரேட்டரி அசிஸ்டன்ட் என பல்வேறு பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.
வயது : 2017 நவ., 1 அடிப்படையில் 18 - 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து பிளஸ் 2 அளவிலான படிப்பில் இயற்பியல், வேதியியல், கணிதப்பாடங்களுடன் தேர்ச்சி, அல்லது பி.எஸ்சி., படிப்பை இயற்பியல் அல்லது வேதியியலில் தேர்ச்சி, அல்லது மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை தொடர்புடைய டிரேடு பிரிவில் முடித்திருப்பது தேவைப்படும். தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
தேர்ச்சி முறை : தகுதிப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் : 2018 மார்ச் 8.
0 Comments
Thanks for your comment