12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பாலத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையும், 12 வயதிற்கு மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கும் அவசர சட்டத்திற்கு நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோரின் சொத்துக்களை முடக்கும் அவசர சட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக முடிவுகள் ஜனாதிபதி ஒப்புதலுக்காக மத்திய சட்ட அமைச்சகத்தால் அனுப்பப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post