வரும் கல்வியாண்டுக்கான புத்தகங்களை இணையதளம் மூலம் பெறலாம்


வரும் கல்வியாண்டுக்கான (2018-19) பாடநூல்களை இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:- தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான பாடநூல்களை பள்ளிகள் மொத்தமாக, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன. நிகழாண்டு புதிய பாடத்திட்டத்தின்படி அச்சிடப்படவுள்ள 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்குத் தேவையான நூல்கள் ஜூன் மாதத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர 2,3,4,5,7,8,10, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்கள், சென்னை நுங்கம்பாக்கம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்திலும் பாடநூல் விற்பனை தொடங்கியுள்ளது. மேலும் வெளி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், பெற்றோர் வசதிக்காக www.textbookcorp.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பணம் செலுத்தி பாட புத்தகங்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இணையதளத்தில் பதிவு செய்த அடுத்த மூன்று நாள்களுக்குள் பாடநூல்கள் நேரடியாக வீடுகளுக்கே கூரியர் சேவை மூலம் அனுப்பி வைக்கப்படும். பாடநூல்கள் விலை விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்தில் ஏற்கெனவே பதிவு செய்த பள்ளிகள், பாடநூல்களை மொத்தமாகப் பெறுவதற்கு இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post