LKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், எல்.கே.ஜி., வகுப்புக்கான மாணவர் சேர்க்கைப்பதிவு, நாளை துவங்குகிறது.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி, மாணவர்களை சேர்க்க வேண்டும். இந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, 2017 முதல், &'ஆன்லைன்&' முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, நாளை துவங்குகிறது.
மே, 18க்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் பெற்றோர், அரசு தேர்வுத் துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்ய, வசதி செய்யப்பட்டுள்ளது.கிராமப்புற மாணவர்களுக்கு, அந்தந்த பகுதி தனியார் பள்ளிகள், வட்டார வள மையங்கள், கல்வித் துறை அலுவலகங்களில், விண்ணப்பம் பதிவு செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
0 Comments
Thanks for your comment