அண்ணா பல்கலையில் விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு! ரூ.10 ஆயிரம் வசூல்




அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளுக்கு தேர்வு நடத்தும் தேர்வுத் துறையில் விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு நடந்ததாக புகார்எழுந்தது. அதிக மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் தலா 10 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. புகாருக்கு ஆளான கல்லுாரி முதல்வர், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
2017 ஏப்ரல்மே மாதங்களில் நடந்ததேர்வில் 3.02 லட்சம் பேர்மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர்.அவர்களில் 73 ஆயிரம் மாணவர்கள்மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண் பெற்றனர்அதிலும் 16 ஆயிரத்து 636 பேர் மிக அதிகமாக மதிப்பெண்பெற்றனர்இதற்கு ஒவ்வொரு மாணவரிடமும் தலா 10 ஆயிரம் ரூபாய் வரைவசூல் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமாதிண்டிவனத்தில்உள்ள அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரி முதல்வர் விஜயகுமார்உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுஇதைதொடர்ந்து தேர்வுகட்டுப்பாட்டு அதிகாரி உமாகல்லுாரி முதல்வர் விஜயகுமார் ஆகியோரின்வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தி பல்வேறுஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.முதற்கட்டமாகவிடைத்தாள் திருத்தத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படும்திண்டிவனம் அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரி முதல்வர் விஜயகுமார்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்மாணவர்களுக்கான அசல்விடைத்தாள்கள் மாயமானதால் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம்லஞ்சம்கொடுத்தது தொடர்பாக கடிதம் எழுதி வாங்கப்பட்டுள்ளது.இந்நிலையில்உமாவிஜயகுமார் மற்றும் பேராசிரியர்கள் மீதான துறைரீதியான நடவடிக்கை குறித்துஉயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்,செயலர் சுனில் பாலிவால் மற்றும் துணை வேந்தர் சுரப்பா ஆகியோர்ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post