உத்தர பிரதேசத்தில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் பலி எண்ணிக்கை 84 ஆக உயர்வு




உத்தர பிரதேச மாநிலம் பரெல்லி, சிடபூர், பஹ்ரை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 6 வார காலமாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை இயக்குனர் கூறியதாவது:

மர்ம காய்ச்சல் குறித்து ஆய்வு நடத்த மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க சிறப்பு மருத்துவர்கள் குழுக்கள் அனுப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது குறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

பரெல்லி, சிடபூா், பஹ்ரைச் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு உள்ளது.  பரெல்லி மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக சுமாா் 24 போ் உயிாிழந்துள்ளனா்.  மாநிலம் முழுவதும் 71 குழந்தைகள் உள்பட 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொது மக்கள் தங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறாமல் காய்ச்சல் முற்றிய பின்னரே மருத்துவமனையை வருகின்றனர்.  இதனால் உயிாிழப்புகள் அதிகரிக்கின்றன. 

காய்ச்சல் குறித்து அறிகுறி தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள  மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை பெறுமாறு பொதுமக்களுக்கு தொடா்ந்து விழிப்புணர்வு ஏற்பட்டு  வருவதாக அதிகாாிகள் தொிவித்துள்ளனா்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post