அமெரிக்காவில் அதிகம் பேசும் இந்திய மொழிகள் தமிழுக்கு மூன்றாம் இடம்
அமெரிக்காவில் அதிகம் பேர் பேசக்கூடிய இந்திய மொழிகள் வரிசையில் தமிழ் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஓராண்டில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவிகிதம் அதிகரித்தது. தி அமெரிக்கன் கம்யூனிட்டி சர்வே என்ற ஆய்வறிக்கையில் இது தெரியவந்துள்ளது. தமிழ் பேசுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 84 ஆயிரமாக இருக்கிறது. அமெரிக்காவில் அதிகம்பேரால் பேசப்படும் இந்திய மொழிகளில் 8 லட்சத்து 63 ஆயிரம் பேருடன் ஹிந்தியும், 4 லட்சத்து 34 ஆயிரம் பேருடன் குஜராத்தியும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. தமிழ் மூன்றாவது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி அமெரிக்காவின் 30.5 கோடி மக்கள்தொகையில் வெளிநாட்டு மொழி பேசுவோர் எண்ணிக்கை 6.7 கோடியாக இருந்தது.
0 Comments
Thanks for your comment