நர்சிங்கிற்கு, நீட் கிடையாது அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
B.Sc., நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, NEET தேர்வு அடிப்படையில் நடைபெறாது, என, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், தமிழகம் - புதுச்சேரி மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான, &'மெட்ரனலைன் - 18&' என்ற, கருத்தரங்கை துவக்கி வைத்து, அவர் கூறியதாவது: தமிழக மாணவர்களுக்கு, நீட் தேர்வில்இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான், அரசின் நிலைப்பாடு. எனவே, பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு, நீட் தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறாது.
இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு, சுகாதாரத் துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். தேவைப்பட்டால், முதல்வர் தலைமையில் கூட்டம் நடத்தி, மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும்.இவ்வாறு, விஜயபாஸ்கர் கூறினார்.
0 تعليقات
Thanks for your comment