காலாண்டு தேர்வு நாளை நிறைவு
தமிழக அரசின் பள்ளி கல்விபாடத்திட்டத்தில், 1 முதல், பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகள்,தனியார் பள்ளிகளில் காலாண்டுதேர்வு மற்றும் முதல் பருவ தேர்வுநடந்து வருகிறது. செப்., 10ல், மாநிலம்முழுவதும், அனைத்து பள்ளிகளிலும்தேர்வுகள் துவங்கின. இதில்,பெரும்பாலான பாடங்களுக்குதேர்வுகள் முடிந்துள்ளன.
இன்று, மொஹரம்பண்டிகை என்பதால், அரசு விடுமுறை. நாளை பள்ளிவேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன், பிளஸ் 2 வரை,அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிகின்றன.பள்ளிகளுக்கு, 23ம் தேதிவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும், அக்., 3ம் தேதி பள்ளிகளில்,இரண்டாம் பருவ பாட வகுப்புகள் துவங்கும் என, பள்ளி கல்வி அதிகாரிகள்தெரிவித்தனர்

0 تعليقات
Thanks for your comment