அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Aadhaar card,Supreme Court,ஆதார்,ஆதார் அட்டை,சுப்ரீம் கோர்ட்

அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதே நேரத்தில், ஆதார் இல்லை என்பதற்காக தனி மனித உரிமைகளை மீறக்கூடாது எனவும் கூறியுள்ளது.

வழக்கு
குடிமக்களின் கை விரல் ரேகை உள்ளிட்ட தனிப்பட்ட ரகசியங்களை பெற்று, அவர்களுக்கு ஆதார் வழங்கியுள்ளதன் மூலம், இது, தனி மனித உரிமையை மீறும் செயல் எனக் கூறி, ஆதாருக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு இன்று (செப்.,26) தீர்ப்பு வழங்கியது.

கடுமையாக்க வேண்டும்
அதில், ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது. குறைந்த, அத்யாவசியத்திற்காக மட்டுமே ஆதார் அடையாளத்திற்காக குறைந்தளவு தகவல்கள் கேட்கப்படுவதாக கருதுகிறோம். இந்தியாவில் கடந்த காலங்களில் அதிகமாக பேசப்பட்ட விவகாரம் ஆதார். சிறந்ததாக இருப்பதை விட தனித்துவத்துடன் இருப்பது தான் முக்கியம். 
தனி நபர் சுதந்திரம் பாதிக்கிறது என்பது மட்டுமே பிரச்னையாக உள்ளது. பல்வேறு திட்டங்களில் போலிகளை களைய உதவுகிறது. ஆதார் என்பது மற்ற அடையாள ஆவணங்கள் போன்றதல்ல. பின்ங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு ஆதார் அதிகாரம் அளிக்கிறது. தனித்துவ அடையாளம் என்பது எளிய மக்களுக்கு அதிகாரமளிக்கும். ஆதாருக்கான சட்ட விதிகளை இன்னும் கடுமையாக்க வேண்டும்.

சட்ட விரோதம்
தீர்ப்பின் மூலம் தனி நபரின் கண்ணியம் பாதுகாக்கப்படும். தனி நபர் கண்ணியம் காக்கப்பட ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும். ஆதார் மூலம் சமூக திட்டங்கள் மக்களுக்கு சென்று சேரும் என்ற மத்திய அரசின் வாதம் ஏற்று கொள்ள கூடியது. தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை கேட்பது சட்ட விரோதம்.

எங்கு கட்டாயமில்லை:
நீட், சிபிஎஸ்இ தேர்வுகளுக்கு ஆதார கட்டாயமாக்க கூடாது. பள்ளி சேர்க்கைக்கும் ஆதாரை கேட்கக்கூடாது. கல்வி, நம்மை, கைநாட்டிலிருந்து கையெழுத்து போட கற்று கொடுத்தது. ஆனால், தொழில்நுட்பம், கைநாட்டிற்கு கொண்டு சென்றுள்ளது. ஆதார், அரசியல்சாசனப்படி செல்லும். ஆதார் இல்லை என்பதற்காக அடிப்படை உரிமைகளை மறுக்கக்கூடாது. சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு ஆதார் கிடைக்காது என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்

அவசியம்
வங்கி கணக்குடனும், மொபைல் போன் சேவைக்கும், சிம்கார்டு வாங்கவும் ஆதார் தேவையில்லை. பான் எண்ணுடனும், வருமான வரி தாக்கல் செய்யவும் ஆதார் அவசியம். ஓட்டுனர் உரிமம் பெறவும் ஆதார் கட்டாயம். கோர்ட் உத்தரவு இல்லாமல், பயோமெட்ரிக் தகவல்களை எந்த நிறுவனத்திற்கும் பகிரக்கூடாது. ஆதார் எண்ணை, எந்த மொபைல் நிறுவனங்களும் கட்டாயமாக கேட்கக்கூடாது. இவ்வாறு தீர்ப்பில் கூறினர்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post