வங்கி, செல்போன், கல்விச் சேவைக்கு ஆதார் கட்டாயமில்லை: தீர்ப்பின் முக்கியம்சங்கள்


Aadhaar card,Supreme Court,ஆதார்,ஆதார் அட்டை,சுப்ரீம் கோர்ட்
அரசு திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ள அதே சமயம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்டவிரோதம் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நீக்கியுள்ளது.
ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் திட்டம், ஆதார் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளது.
ஆதார் தீர்ப்பின் முக்கியம்சங்கள்:
தனிநபர் கண்ணியம் காக்கப்பட ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் கட்டாயமாக்கக் கூடாது.
நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது.
ஆதார் அடையாள அட்டைக்கும் பிற அடையாள அட்டைகளுக்கும் வித்தியாசம் உள்ளது.
ஆதார்  அட்டையை போலியாக உருவாக்க முடியாது.
ஆதார் என்பது மற்ற அடையாள ஆவணங்களைப் போல அல்ல. குறைந்த, அத்தியவாசியத் தகவல்கள் மட்டுமே ஆதாருக்காகப் பெறப்படுகிறது.
ஆதார் சிறந்தது என்பதை விட தனித்துவமானது என்பதே நல்லது. 
தனி நபர் சுதந்திரத்தை ஆதார் திட்டமும், அட்டையும் பாதிக்கிறது என்பதே பிரச்னையாக உள்ளது.
ஆதார் இல்லை என்பதற்காக தனிநபரின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது.
வங்கி மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கும், செல்போன் சேவைக்கும் ஆதார் எண்ணைக் கேட்கக் கூடாது.
ஆதார் இல்லை எனக் கூறி குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்டவை மறுக்கப்படக் கூடாது.
பான் எண் பெற ஆதார் எண் கட்டாயம் என்பது சரியே.
எந்தக் காரணத்தைக் கொண்டும் தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணை பெறக் கூடாது, ஆதார் எண்ணைக் கையாளக் கூடாது என்று மிக பரபரப்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று அளித்துள்ளது.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post