15 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி: முதல்வர் அறிவிப்பு




36 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கொடுத்துள்ளோம். இன்னும் 15 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி விரைவில் கொடுக்க இருக்கிறோம். என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் அடுத்த பூலாவரி பிரிவு சாலையில், அதிமுகவின் 47வது ஆண்டு துவக்க கொடியேற்று விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நான் இன்று முதல்வராக இருந்தால்கூட, தொண்டனாகத்தான் உங்கள் முன் பேசிக்கொண்டிருக்கிறேன். கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. 36 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணினி கொடுத்துள்ளோம். இன்னும் 15 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி விரைவில் கொடுக்க இருக்கிறோம். மருத்துவத் துறையிலே தமிழகம் சிறந்து விளங்குகிறது. வேளாண்மைத்துறையில் உணவுதானிய உற்பத்திக்காக, தொடர்ந்து மத்திய அரசின் க்ரிஷ் கர்மான் விருதை பெற்றுக்கொண்டிருக்கிறோம்.

தடுப்பணை கட்டுவதற்கு தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வீரபாண்டி தொகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, கூட்டுக்குடிநீர் திட்டத்தை புதிதாக உருவாக்கியுள்ளோம். அரியானூரில் அடிக்கடி நடக்கும் விபத்தை குறைக்கும் வகையில், ₹45 கோடி மதிப்பில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும். இதேபோல், மகுடஞ்சாவடியில் கொங்கணாபுரம் செல்லும் சாலையில் விபத்து நடப்பதால், அங்கும் ஒரு மேம்பாலம் கட்டப்படுகிறது. இருபணிகளுக்கும் சில நாட்களுக்கு முன்பு ெடண்டர் விடப்பட்டது. மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசாக தொடர்ந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post