உதவிகலெக்டர், டி.எஸ்.பி., வணிகவரி உதவிஆணையர் போன்ற பதவிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. இப்பணிகளுக்கு கடந்த ஜூலையில் வெளியான அறிவிப்பில் பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்டடோருக்கு வயது வரம்பு உயர்த்தியது. அக்டோபர் 12 முதல் மூன்றுநாட்கள் இதற்கான தேர்வு தமிழகத்தின் பல மையங்களில் நடந்தன. இந்நிலையில் இத்தேர்விற்கான விடை தாள் திருத்தும் பணி நேர்மையாக, பாதுகாப்பாக நடக்கிறது. டிசம்பர் இறுதியில் தேர்வு முடிவு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இடைத்தரகர்களின் தவறான வாக்குறுதிகளை நம்பி ஏமாறவேண்டாம் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
0 Comments
Thanks for your comment