பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு : மத்திய அரசு உத்தரவு!
பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 2.50 காசுகள் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். வங்கிக்கடன் வட்டி விகிதத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளதால் பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 86 டாலராக உள்ளதாகவும், ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
0 Comments
Thanks for your comment