அக்டோபர் 4ஆம் தேதி தற்செயல் விடுப்பு எடுக்கும் தமிழக அரசு அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.




பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜக்டோ-ஜியோ அமைப்பு அக்டோபர் 4 ஆம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டம் அறிவித்திருந்த நிலையில், பல்வேறு துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு, அரசு அலுவலகப் பணிகளை பாதிக்கும் என்பதால் அனுமதியின்றி எடுக்கப்படும் விடுப்புக்கு ஊதியம் இல்லை என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அன்றைய தினம் அனைத்து அலுவலக ‌வருகைப் பதிவு நிலையை காலை 10.30 மணிக்குள் தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். எனினும் உரிய காரணங்கள் இருப்பின் உண்மைத் தன்மையை அறிந்து விடுப்பு அளிக்கலாம் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post