ஜாக்டோ-ஜியோ போராட்ட அறிவிப்பு மாற்று ஏற்பாடுகள் தயார்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பு போராட்டம்நடக்கிறது.
போராட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்காக போராடுகிறார்கள். அவர்களுக்கு நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழுவிடம் கோரிக்கை குறித்து மனு அளிக்கலாம். அவர்கள் இன்று பணிக்கு வரவில்லை என்றால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை விட்டுள்ளார். பள்ளிகள் அனைத்தும் திறந்து இருக்கும். மாற்று ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
Thanks for your comment