வாட்ஸ் அப்பில் வந்துள்ள ஐந்து ஸ்மார்ட் அப்டேட்ஸ்!





சேட்டிங்கில் பிரபல செயலியான வாட்ஸ் அப் நிறுவனம் ஆண்ட்ராய்டு மொபைல்களில் 5 புதிய சேவைகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

உலகில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப்பில் புதுப்புது அப்டேட்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில் வாட்ஸ் அப்பில் ஸ்வைப் செய்தால், உடனடியாக பதில் அனுப்பும் ஆப்ஷன் அப்டேட் ஆக உள்ளது.

இந்நிலையில் வாட்ஸ் அப்பின் அடுத்த 5 அப்டேட்டுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆண்ட்ராய்டு மொபைல்களில் புதிதாக 5 சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்வைப் டூ ரிப்ளை என்ற அப்டேட்டில் ரிப்ளை செய்யவேண்டிய செய்தியின் மீது விரல் வைத்து வலது புறமாக ஸ்வைப் செய்தால் ரிப்ளைக்கான வசதி வரும். அதில் எளிதாக டைப் செய்து அனுப்பிவிடலாம். அடுத்ததாக பிக்சர் இன் பிக்சர் மோட் என்ற வசதி iOSல் பயன்பாட்டில் உள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டுக்கு வர உள்ளது. இதன்மூலம் வீடியோ லிங் அனுப்பினால் குறிப்பிட்ட வீடியோ சிறிய திரையில் தோன்றும். இதையடுத்து ஆட்ஸ் ஃபார் ஸ்டேட்டஸ் என்ற வசதியும் அறிமுகப்படுத்தப்படும். யூடியூப் போன்று வாட்ஸ் அஒ ஸ்டேட்டஸில் விளம்பரம் வரக்கூடிய வசதி வரவுள்ளது. மேலும் பிஸ்கட் ஸ்டிக்கர் பேக் என்ற வசதியும் வரவுள்ளது இதன்மூலம் புதிய ஸ்டிக்கர்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்யவுள்ளது.

இறுதியாக இன்லைன் இமேஜ் நோட்டிஃபிகேஷன் வரவுள்ளது. இதன்மூலம் வாஸ்ட் அப்பில் நமக்கு அனுப்பப்படும் புகைப்படங்களை சிறிய அளவில், நோட்டிஃபிகேசனிலேயே பார்க்கும் வசதியாகும்.மேற்கண்ட அனைத்து வசதிகளும் பீட்டா சோதனையில் உள்ளது விரைவில் செயல்பாட்டுக்குவரும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post