இந்தியாவை கொடிய வெப்பம் தாக்கும்

பருவநிலை மாறுபாடு காரணமாக இந்தியாவை கொடிய வெப்பம் தாக்கும் என அரசுகளுக்கிடையேயான பருவநிலை மாற்ற குழுவின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் 2015 ம் ஆண்டைப் போல் இந்தியாவில் கடும் வெப்பத்திற்கு 2500 பேர் வரை உயிரிழக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



கோல்கட்டாவுக்கு பாதிப்பு

மேலும் இந்த அறிக்கையில், 2030 முதல் 2052 ம் ஆண்டிற்குள் புவி வெப்பமயமாதல் 1.5 டிகிரி செல்மியஸ் அளவிற்கு அதிகரிக்கும். இதனால் உலகின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும். இதன் காரணமாக இந்திய துணைகண்டத்தில் கோல்கட்டா மற்றும் பாகிஸ்தானின் கராச்சி ஆகிய நகரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்.

இந்த பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால் மனிதர்களின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படும். ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகமானால் இந்தியா, பாகிஸ்தான் மோசமாக பாதிக்கப்படும். வெப்பம் அதிகரிப்பதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உணவு தட்டுப்பாடு ஏற்படும்.
உணவு பொருட்கள் விலை உயர்வு, வருவாய் இழப்பு, வாழ்வாதார இழப்பு, உடல்நிலை பாதிப்புக்கள் ஏற்படும்.

ஆசியாவில் அரிசி, கோதுமை, தானிய வகைகள் உள்ளிட்டவைகளின் உற்பத்தி குறையும். கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவின் அனல் மின் சக்தி துறையில் மட்டும் 929 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post