" Momo Challenge " - விளையாட கூடாது : கல்வித்துறை எச்சரிக்கை!
இணையதள விபரீத விளையாட்டான, 'மோமோ சேலஞ்ச்' பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தொடக்ககல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இணையதள, 'புளூவேல்' விளையாட்டு, பல இளைஞர்களை தற்கொலைக்கு துாண்டியதால், அதற்கு தடை விதிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, மோமோ சேலஞ்ச் என்ற மற்றொரு விபரீத விளையாட்டுக்கு, சிறார் ஆட்படுவது தெரியவந்துள்ளது.இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையில், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்குமாறு, தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்திஉள்ளார்.'மோமோ சேலஞ்ச், வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிரப்படுவதால், விளையாட்டாக மொபைல் போன்களில் பதிவிறக்கி, மாணவர்கள் விளையாட வாய்ப்புள்ளது. ஒருமுறை இந்த விளையாட்டில் உறுப்பினராக சேர்ந்தால், அடுத்தடுத்த நிலைகளில் விளையாட, துாண்டப்படுவதாக கூறப்படுகிறது.
'இறுதியில் தற்கொலை செய்து கொள்ள வைப்பதால், இது சார்ந்து, விரிவாக மாணவர்களுக்கு விளக்க வேண்டும்' என, சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments
Thanks for your comment