Science Fact 39 - ஒரே நிலையில் நாம் கைகளையோ அல்லது கால்களையோ வைத்துக் கொண்டிருந்தால் சிறிது நேரம் கழித்து அவை மரத்துப் போவது ஏன் ?

Science Fact 39 - ஒரே நிலையில் நாம் கைகளையோ அல்லது கால்களையோ வைத்துக் கொண்டிருந்தால் சிறிது நேரம் கழித்து அவை மரத்துப் போவது ஏன் ?




நாம் நமது கைகளையோ அல்லது கால்களையோ சிறிது நேரம் ஒரே நிலையில், குறிப்பாக எதன் மீதாவது அழுத்திய நிலயில் - வைத்துக்கொண்டிருந்தால், அப்பகுதி மரத்துப்போவது உண்மையே. இதற்குக் காரணம் என்னெவென்றால், அவ்வாறு நீண்ட நேரம் அழுத்தப்பெறும் குறிப்பிட்ட அப்பகுதியில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு, நரம்புகள் செயற்பாட்டைத் தற்காலிமாக இழந்து விடுகின்றன.

இதன் விளைவாக தொடு உணர்ச்சி இழக்கப்பெற்று மரத்துப்போகும் நிலை அப்பகுதிகளில் உண்டாகிறது. இத்தகைய நிலை தற்காலிகமானதுதான். அப்பகுதிகளில் அழுத்தம் நீங்கப்பெற்றவுடன், அதாவது கை கால்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தவுடன், ரத்த ஓட்டம் சீரடைந்து சிறிது நேரத்தில் சாதாரண உணர்வைப் பெறமுடிகிறது.
Post Navi

Post a Comment

0 Comments