Science Fact 41 - பம்பைப் (pump) பயன்படுத்தி மிதிவண்டிச் சக்கரத்திற்குக் காற்றடிக்கும்போது, பம்ப் குழாய் சூடாவது ஏன் ?

Science Fact 41 - பம்பைப் (pump) பயன்படுத்தி மிதிவண்டிச் சக்கரத்திற்குக் காற்றடிக்கும்போது, பம்ப் குழாய் சூடாவது ஏன் ?



அடிப்படையில் பம்ப் என்பது காற்றை அழுத்துவதற்குப் பயன்படும் ஒரு சாதனம்.

மிதிவண்டிச் சக்கரத்திற்குக் காற்றை ஏற்றும்போது பம்பின் நடுப்பகுதியில் உள்ள தண்டானது(rod) மேலும் கீழும் மாறி மாறி விரைந்து செல்வதைக் காண்கிறோம்; கீழ்நோக்கிச் செல்லும்போது காற்று அதிகமான அழுத்ததிற்கு உட்பட்டு அதன் வெப்பநிலை (temperarure) மிகுதியாகிறது.

மேலும் பம்ப் விரைந்து செயல்படுவதால் காற்றில் அழுத்தம் மிகுதியாக ஏற்பட்டு கூடுதல் வெப்பமும் உண்டாகிறது. இவ்வாறு விரைவாக உற்பத்தியாகும் வெப்பம் அதற்கு ஏற்றவகையில் விரைந்து வெளியேற முடிவதில்லை. இதன் விளைவாகபம்பின் வெளிப்புறப் பகுதிக்கு வெப்பம் பரவி குழாய் சூடாகிறது.
Post Navi

Post a Comment

0 Comments