அரசு பள்ளிக்கு என தனி செயலி வடிவமைத்து அசத்தும் ஆசிரியர்கள்!

சிவகங்கை மாவட்டம்மானாமதுரை ஒன்றியம்
மிளகனூர் கிராமத்தில் இயங்கும் அரசு உயர்நிலைப்பள்ளியில்தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்விப்பணி
மாணவர்களுக்கும்ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை விடும்நோட்டிற்கு குட்பை சொல்லிவிட்டுஆப் மூலமாக பல அறியதகவல்களை இப்பள்ளி வழங்கிவருகிறது.
நமது பள்ளி செயலியை உருவாக்கியதில் பெருமிதம்கொள்கிறோம்
இது முற்றிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நலனுக்காக
உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலி மூலமாக மாணவர்களின்வளர்ச்சியும்,பள்ளியின் வளர்ச்சி நிலையயும் எளிதில் அரசின்கவனத்தையும் நமது பள்ளியைச் சுற்றியுள்ள தனியார்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கவனத்தையும் ஈர்த்துநமது பள்ளியை ஒரு முன்மாதிரிப் பள்ளியாக உருவாக்குவதேஇந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதன் நோக்கமாகும்.

வாருங்கள்இந்தச் செயலியில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றிஉங்களுக்கு
விளக்குகிறேன்.

முகப்பு பக்கத்தில் தலைமையாசிரியர் பெயரும் பள்ளியின்பெயரும்
தொலைபேசி எண்ணுடன் இடம் பெற்றிருக்கும்.
தொலைக்காட்சியில் ஓடும் Scrolling போல அறிவிப்பு செய்திகள்என்ற பகுதி உள்ளது.
அடுத்து இரண்டாவது  முகப்பு பக்கத்தில் ஆறு விதமானதலைப்புகளில் கட்டங்கள் அடங்கிய பகுதி காணப்படும்அந்தப் பகுதி குறித்து கீழ் காண்போம்.
இந்த ஆறு கட்டங்களுக்கு மேல் பகுதியில் பள்ளியின் நிகழ்ச்சிநிரல்கள் தொடர் செய்தியாக நகர்ந்து செல்லும்அதில் ஏதாவதுஒன்றை தட்டினால் அது குறித்த முழு செய்தி குறித்தவிபரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

1. ஆளுமை பகுதி (Admin)
ஆளுமைப் பகுதி என்பது நமது பள்ளி செயலி முழுவதும்தலைமையாசிரியர் கட்டுப்பாட்டில் இருக்கும்இதில்பதிவேற்றம் செய்யப்படும் நிகழ்ச்சி குறித்த செய்திகள்புகைப்படங்கள்பள்ளியில் பயிலும் மாணவர்கள் குறித்தஅனைத்து விபரங்களும் தலைமையாசிரியர் அனுமதியின்றியாரும் செயல்படா வண்ணம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்தலைமையாசிரியர் கவனத்தின் மூலமாக.


2. பெற்றோர் பகுதி (Parents)
இதில் மாணவர்களின் பெற்றோர் குறித்த விபரங்கள்அடங்கியிருக்கும்.
மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்த நாட்கள் மற்றும்அவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் குறித்த விபரங்கள்அனைத்தும் பள்ளி தலைமையாசிரியர் மூலம் பெற்றோருக்குதெரியப்படுத்தப்படும்.
பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகள் குறித்த அறிவிப்புகள்தேதிகள் இதன் வாயிலாக அனுப்பப்படும்.

3. மாணவர்கள் பகுதி (Student)
மாணவர்கள் பகுதியில் ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்டவிபரங்கள் அடங்கியிருக்கும்.
ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு உள்நுழை குறியீடும் மற்றும்இரகசிய சொல்லும் தரப்படும்இவற்றைப் பயன்படுத்திமாணவர்கள் உள்நுழைந்து தங்கள் விபரங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
ஒவ்வொரு மாணவரும் பள்ளிக்கு வருகைபுரிந்த நாட்களானதுஇந்தப் பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.

i. மாணவர்களின் குறைகள் பகுதி
இதன் வாயிலாக மாணவர்கள் தங்கள் குறைகளைதலைமையாசிரியருக்குத் தெரியப்படுத்த முடியும்.    
ஒவ்வொரு மாணவரும் தங்கள் பள்ளியின் நிலை குறித்தும்தனது வகுப்பு ஆசிரியர் குறித்த நிறைகள் மற்றும் குறைகளைநேரடியாக பள்ளி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திக்கொள்ளலாம்.
மாணவர்களின் பெற்றோருக்கும் தங்கள் பள்ளி குறித்தும்பள்ளி ஆசிரியர்கள் குறித்தும் தங்கள் நிறைகுறைகளைதெரிவிக்க உதவியாக இருக்கும்.
மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு வரமுடியாத பட்சத்தில் ஆப்மூலமாகவே விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி வேண்டுதல்பகுதியும் (Leave Request) உள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர் அளித்த புகார்கள் குறித்துபள்ளி தலைமையாசிரியர் உண்மை நிலையை அறிந்து எளிதில்அதற்கான தீர்வு எடுக்க இந்தப்பகுதி பயனுள்ளதாக அமையும்.

4. நமது பள்ளி (namathu palli) :
நமது பள்ளி என்ற பகுதியில் நமது பள்ளியினுடைய சிறப்புகள்மற்றும் நமது பள்ளி அமைந்திருக்கும் இடம்சுற்றுச்சூழல்பற்றிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன.


5. Gallery :
இப்பகுதியை இரண்டு பகுதிகளாகப் பிரித்துள்ளோம்இதில்Photo gallery, Video gallery என இரண்டு பகுதிகள் உள்ளன. Photo gallery இல் நமது பள்ளியின் புகைப்படம் மற்றும்  நம் பள்ளி மாணவமாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போதுஎடுக்கப்பட்ட புகைப்படம்பரிசுகள் வழங்கும் போதுஎடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. Video Gallery இல் நமது பள்ளியின் video காட்சிகள் மற்றும்  நம் பள்ளி மாணவமாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போதுஎடுக்கப்பட்ட video காட்சிகள்மாணவ மாணவிகள் சுற்றுலாசென்ற போது எடுக்கப்பட்ட video காட்சிகள் ஆகியவைஇடம்பெற்றுள்ளன.

6. நிகழ்வுகள் பகுதி (Events)
நிகழ்வுகள் பகுதியில் பள்ளியில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்குறித்த செய்தி இடம் பெற்றிருக்கும்.
இதன் மூலம் மாணவர்களின் திறன் வெளிப்படுத்தப்படும்.
மாணவர்கள் செய்த சமூகப்பணி (தங்கள் இருக்கும் பகுதிமற்றும் பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றவைஇடம் பெறும்.

7. தேர்வு முடிவுகள் பகுதி (Result)
தேர்வு முடிவுகள் பகுதியில் மாணவர்களின் தேர்வு முடிவுகள்குறித்த செய்திகள் பதிவேற்றம் செய்யப்படும்.
ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் பருவத்தேர்வு முதல்சிறப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள் அவர்களுக்கு இதன்வாயிலாக தெரியப்படுத்தப்படும்.
உடல்நிலை சரியில்லாத நேரத்தில் பள்ளிக்கு வர இயலாதமாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை வீட்டிலிருந்தே அறிந்துகெள்ள முடியும்.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் பொழுது கூடவே ஒவ்வொருமாணவரும்
தங்கள் பாடவாரியாகப் பெற்ற மதிப்பெணகளை இந்தப்பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

8. அறிவிப்பு பகுதி (Announcement)
இதில் பள்ளிகளில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும்முக்கிய நிகழ்ச்சிகள் குறித்த செய்திகள் குறிப்பிட்ட தேதிவாரியாக வெளியிடப்படும்.
அனைத்து அறிவிப்புகளைவிடவும் மாணவர்களின்உயிர்நாடியாகக் கருதப்படும் அரசு விடுமுறை நாட்கள் குறித்தஅறிவிப்புகள் இதில் முக்கியமாக இடம் பெற்றிருக்கும்.
பள்ளியில் பருவத்தேர்வுகள் முதல் அரசுப் பொதுத்தேர்வுகுறித்த தேதி அட்டவணைப் பட்டியல் குறித்த அறிவிப்புகள்அடங்கியிருக்கும்.


9. தேர்வுக்கு தேவையான குறிப்புகள் (Study materials)
இந்தப்பகுதியில் மாணவர்களுக்குத் தேவையான தேர்வுகாலங்களில் பயன்படும் வகையில் பாடப்புத்தகத்திலிருந்துஎடுக்கப்பட்ட முக்கிய வினாக்களின் தொகுப்பு PDF வடிவில்பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்
மாணவர்கள் தங்கள் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்துபடித்துக் கொள்ளலாம்

10. எங்களை தொடர்புகொள்ள (Contact)
இந்தப் பகுதியை அனைவரும் பயன்படுத்தும் வகையில்அமைந்துள்ளது.
இந்தச் செயலி குறித்த கருத்துக்களை பொது மக்கள்அனைவரும் இதில் பதிவு செய்யலாம்இந்தச் செயலியில் உள்ளநிறை மற்றும் குறைகளை இதில் தெரிவிக்கும் வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளது.


                                                 இப்படிக்கு
                                            அரசு உயர்நிலைப்பள்ளி
மிளகனூர்சிவகங்கை மாவட்டம்
தலைமையாசிரியர்
முனைவர் V.M.விநாயகமூர்த்தி
செல் : 9976935585




Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post