தமிழகம் முழுவதும் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க 42 சேவை மையங்கள் இணையதள முகவரியும் வெளியீடு
                                             தமிழகத்தில் பி.இ. மற்றும் பி.டெக் படிப்பில் சேர விண்ணப்பிப்பதற்காக 42 சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் நேரடியாக விண்ணப்பிக்க இணையதள முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பாணை வெளியீடு தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ள நிலையில், பி.இ. மற்றும் பி.டெக். போன்ற என்ஜினீயரிங் படிப்பில் சேரும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக, விண்ணப்பிக்கும் வழிமுறைகளை உள்ளடக்கி தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பானை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கு 2019-2020-ம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். பட்டப்படிப்பில் சேர்வதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்காக https://www.tneaonline.in, htpp://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் மே 2-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையில் விண்ணப்பிக்க முடியும். இதில் விண்ணப்ப கட்டணத்தை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாகவும், நெட்பேங்கிங் வாயிலாகவும் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் தங்களின் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கு ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலுமாக 42 சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம் மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கலாம். அதேநேரம் ஆன்லைன் மூலம் பதிவு கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்களும், “செயலாளர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை” என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து இந்த மையங்களில் அளிக்கலாம். கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டிகள் மற்றும் கால அட்டவணை போன்றவை இணையதளம் மூலம் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். மாணவர்கள் விண்ணப்பிக்கும் போதே அசல் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தினை தேர்வு செய்துகொள்ள வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள், மாணவர்கள் பதிவு செய்த செல்போன் மற்றும் இ-மெயில் வாயிலாக தெரிவிக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பின் போது உரிய நாட்களில் விண்ணப்பப்படிவத்துடன் அசல் சான்றிதழ்கள் மற்றும் நகலுடன் தங்களுக்கான சேவை மையத்தில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்ய வேண்டும். விளையாட்டு ஒதுக்கீட்டிற்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் சென்னையில் மட்டும் நடைபெறும். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக சென்னையில் மட்டும் நடைபெறும். என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக அமைக்கப்பட்டு உள்ள 42 சேவை மையங்கள் மற்றும் இடங்கள் பற்றிய விவரம் வருமாறு:- சென்னை மாவட்டம் - சென்டிரல் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி. கடலூர் - திரு கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி, விருத்தாசலம். அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம். காஞ்சீபுரம் - பச்சையப்பன் பெண்கள் கல்லூரி, சின்ன காஞ்சீபுரம். ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் கல்லூரி, பாரதிபுரம், குரோம்பேட்டை. திருவள்ளூர் - முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, ஆவடி. திருவண்ணாமலை - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செய்யார். வேலூர் - தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப நிறுவனம், பாகாயம். விழுப்புரம் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, சங்கராபுரம். அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கண்டாச்சிபுரம். கோவை - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பீளமேடு. அரசு பாலிடெக்னிக் பெண்கள் கல்லூரி, புது சித்தாபுதூர். கோவை தொழில்நுட்ப நிறுவனம், கோவை. தர்மபுரி - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, செட்டிகரை. ஈரோடு - சக்தி பாலிடெக்னிக் கல்லூரி, சக்திநகர். அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பெருந்துறை. கிருஷ்ணகிரி - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, பர்கூர். நாமக்கல் - என்.கே.ஆர். அரசு பெண்கள் கலை கல்லூரி, நாமக்கல். நீலகிரி - அரசு கலை கல்லூரி, உதகமண்டலம். சேலம் - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, ஓமலூர். திருப்பூர் - சிக்கன்ன அரசு கலை கல்லூரி, திருப்பூர். கரூர் - அரசு கலை கல்லூரி, தான்தோன்றிமலை. மதுரை - தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, ஜெய்ஹிந்த் புரம். தியாகராஜர் என்ஜினீயரிங் கல்லூரி, திருப்பரங்குன்றம். ராமநாதபுரம் - அரசு கலை கல்லூரி, பரமக்குடி. தேனி - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, போடிநாயக்கனூர். திண்டுக்கல் - ஜி.டி.என். கலை கல்லூரி, திண்டுக்கல். அரியலூர் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கீழபழூர். நாகப்பட்டினம் - வாலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி, பால்பண்ணைசேரி. பெரம்பலூர் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கீழகனவாய். புதுக்கோட்டை - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அறந்தாங்கி. தஞ்சாவூர் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ரெகுநாதபுரம். அரசு என்ஜினீயரிங் கல்லூரி, செங்கிப்பட்டி. திருச்சி - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, துவாக்குடிமலை. அரசு என்ஜினீயரிங் கல்லூரி, ஸ்ரீரங்கம். திருவாரூர் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, வலங்கைமான். சிவகங்கை - ஏ.சி.அரசு என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, காரைக்குடி. கன்னியாகுமரி - தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, கோட்டார், நாகர்கோவில். திருநெல்வேலி (2 இடம்) - அரசு என்ஜினீயரிங் கல்லூரி, திருநெல்வேலி. ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி, காந்திநகர், பழைய பேட்டை. தூத்துக்குடி - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தூத்துக்குடி. விருதுநகர் - வி.வி. வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 044-22351014, 044-22351015 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்கம் கூறியுள்ளது.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post