Current Affairs 18/6/2019
www.tnschools.co.in, tnpsc.exams9.in
16. ஒரு நாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய அணி என்ற தனது முந்தைய உலக சாதனையை இங்கிலாந்து மாற்றி அமைத்தது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் செயின்ட்ஜார்ஜில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 24 சிக்சர்கள் அடித்திருந்தது.
15. இங்கிலாந்து கேப்டன் மோர்கன் இந்த உலக கோப்பையில் இதுவரை 22 சிக்சர்கள் (5 ஆட்டம்) அடித்திருக்கிறார். இன்னும் 5 சிக்சர் எடுத்தால், ஒரு உலக கோப்பையில் அதிக சிக்சர் நொறுக்கிய வீரர் என்ற மகிமையை பெறுவார். இந்த வகையில் 2015-ம் ஆண்டு உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் 26 சிக்சர் எடுத்ததே அதிகபட்சமாக நீடிக்கிறது.
14. ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் மொத்தம் 11 சிக்சர்களை விட்டுக்கொடுத்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் களை தாரை வார்த்த பவுலர் இவர் தான்.
13. இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ரஷித்கானின் பந்து வீச்சில் மட்டும் 7 முறை பந்தை சிக்சருக்கு அனுப்பியிருக்கிறார். ஒரு நாள் போட்டி ஆட்டம் ஒன்றில் குறிப்பிட்ட பவுலரின் ஓவரில் அதிக சிக்சர் அடித்த பேட்ஸ்மேனாகவும் மோர்கன் வலம் வருகிறார்.
12. ஆப்கானிஸ்தானை கதறடித்துஇங்கிலாந்து அணி 4-வது வெற்றிமோர்கன் சதம் அடித்தார்
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை கதறடித்த இங்கிலாந்து அணி ‘மெகா’ வெற்றியை ருசித்தது. மோர்கன் 17 சிக்சருடன் 148 ரன்கள் குவித்து மிரட்டினார்.
11. 1910 அமெரிக்காவில் வாஷிங்டனில் முதல் தடவையாக தந்தையர் நாள் கொண்டாடப்பட்டது.
10. 1912 - ஐக்கிய அமெரிக்காவில் 8 மணி நேர வேலைத்திட்டம் அமலாகியது.
9. 1961 - குவைத் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
8.1987 - ஸ்பெயினில் கடைத்தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 21 பேர்ர் கொல்லப்பட்டனர்.
7. 1953 - அமெரிக்காவின் அணுவாயுத ரகசியங்களை சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜூலியஸ் மற்றும் எத்தல் ரோசன்பேர்க் என்ற யூதத் தம்பதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
6. 1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பிலிப்பைன்ஸ் கடல் சமர் இடம்பெற்றது.
5. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டன் நாவலாசிரியர் இறந்த தினம்: ஜூன் 19- 1993
சர் வில்லியம் கோல்டிங் (செப்டம்பர் 19, 1911- ஜூன் 19, 1993) இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய நாவலாசிரியர் இவரது படைப்புக்களில் மிகவும் பிரபலமானது லார்ட் ஆஃவ் தி பிளைஸ் (Lord of the Flies) என்பதாகும் பட்டப்படிப்பைத் தொடர்ந்த காலத்திலேயே (1934) தனது முதற் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் 1961-ன் பின்னர் முழுநேர எழுத்தாளரானார். 1980-ல் ரைட்ஸ் ஆஃவ் பேசேஜ் (Rites of Passage) நாவலுக்காக புக்கர் பரிசு பெற்றாா்.
4. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரில் நடைபெற்ற கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக டிரம்ப் முறைப்படி அறிவித்தார். மேலும் இந்த தேர்தலில் தான் வெற்றி பெற அதிகவாய்ப்பு இருப்பதாக சர்வதேச கருத்துகணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
3. ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது கண்ணி வெடி தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா கூடுதலாக ஆயிரம் ராணுவ வீரர்களை மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.
2. மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் உள்ள எல் போபோ எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டு சாம்பல் புகையை கக்கி வருகிறது. எரிமலையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவுக்கு காற்றில் சாம்பல் பரவி வருவதால் மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
1.அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்து இருப்பதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசா காலம் முடிந்த பிறகும் அமெரிக்காவில் தங்கி இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 Comments
Thanks for your comment