current affairs daily 3/7/2019
Tnpsc group-4 Current affairs Daily Download
Download Kanmani Current Affairs App
18. தமிழக அரசின் ஒத்துழைப்பு கிடைக்காததால் தான் மதுரை - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதைத் திட்டம் தாமதமாவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
17. இம்ரான்கான் உத்தரவால் பாகிஸ்தானில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட இந்துக் கோயில்!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட சியால்கோட்டில் அமைந்திருக்கும் மிகப் பழமையான இந்துக் கோயில் சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டதன்பேரில், பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினமான இந்து சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஷவாலா தீஜா சிங் கோயில் திறக்கப்பட்டுள்ளது.
16. இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா 3 முக்கியச் சாதனைகளைப் படைத்தார்
ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய பேட்ஸ்மேன், உலகக் கோப்பையில் அதிக முறை ஆட்ட நாயகன் மற்றும் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து
15. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் தமிழகத்தில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசால் செயல்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
14. தமிழகத்தில் மேலும் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
13. நபார்டு திட்டத்தின் கீழ், சாலைகள் அமைப்பதற்கு இந்தியாவிலேயே அதிக நிதி பெற்று அதனை செயல்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
12. உத்தர பிரதேச மாநிலம், ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக, ரேபரேலி தொகுதி, எம்.பி.,யும், காங்., மூத்த தலைவருமான சோனியா குற்றம் சாட்டினார்.
11.கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணி வீரர் அம்பதி ராயுடு அறிவித்துள்ளார். 33 வயதான அம்பத்தி ராயுடு, இதுவரை 55 ஒரு நாள், 6 டுவென்டி - 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற ஷிகார் தவான் , விஜய் சங்கர் ஆகியோர் காயத்தால், விலகிய போதும், தனக்கு வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் அம்பதி ராயுடு , அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
10. நாடு முழுவதும், ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கைவிடும்படி, மத்திய அரசுக்கு, தமிழக அரசு, கடிதம் எழுத உள்ளது.
9. ஜப்பான் பயணத்தின் போது துருக்கி அதிபரின் மனைவி விலை உயர்ந்த கைப்பையை எடுத்துச் சென்ற விவகாரம் விமர்சனத்திற்கு உள்ளானதுடன், சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.துருக்கி அதிபர் ரிசெப் தய்யிப் எர்டகானின் மனைவி எமைன் எர்டகான். இவர் கணவருடன் அரசு முறையாக பயணமாக ஜப்பானுக்கு சமீபத்தில் சென்றார். டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனைக்கு துருக்கி அதிபர், மனைவியுடன் சென்ற போட்டோக்கள் வெளியானது. இதில் அதிபரின் மனைவி வைத்திருந்த கைப்பை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிபர் மனைவியின் கைப்பை விலை, அந்நாட்டில் உள்ள 11 பேருக்கு ஓராண்டிற்கு வழங்கப்படும் குறைந்தபட்ச தினக்கூலிக்கு சமம். கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது துருக்கி. மக்கள் விலைவாசி உயர்வால் துன்பப்பட்டு வரும் நிலையில், அதிபர் மாளிகையில் சொகுசு வாழ்க்கையை தொடர்வது இதன் மூலம் உறுதி ஆகி உள்ளதாக பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
8. 2019-20 ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 05 ம் தேதியன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார்.
7.நாட்டின் 2019-20 ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியம் நாளை (ஜூலை 4) காலை 11 மணியளவில் பார்லி.,யில் தாக்கல் செய்ய உள்ளார்.
6.ஜூலை 5 ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் கம்பெனிகளுக்கான வரிகள் நீக்கப்படவோ அல்லது குறைக்கப்படவோ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின்படி வணிக வங்கிகளின் வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் 2.8 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.25.1 லட்சம் கோடியாக இருந்த வளர்ச்சி, 2019 ஏப்ரலில் ரூ.28.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே வணிக வங்கிகளின் வளர்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் வணிக வங்கிகளின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையிலான வரிச்சலுகைகளும் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
5. ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா, அந்நாட்டிடம் இருந்து மற்ற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்க தடை விதித்துள்ளது. மீறி வாங்கும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகேனி கூறியதாவது: கச்சா எண்ணெய் இறக்குமதியில், இந்தியா தனது தேச நலனை கருத்தில் கொண்டு செயல்படும். இந்தியாவின் எரிசக்தி துறை பாதுகாவலராக ஈரான் திகழும். கச்சா எண்ணெயை , இந்தியாவுக்கு குறைந்த விலையிலும், பாதுகாப்பாகவும், எளிதாகவும் தர முடியும். எண்ணெய் இறக்குமதி குறித்து, எங்களின் நட்பு நாடுகளை கட்டாயப்படுத்த மாட்டோம். இந்த விவகாரத்தில் இந்தியாவே முடிவெடுத்து கொள்ளலாம்.
4. இன்று மியான்மர் பெண்கள் தினம்
3. இன்று பெலரஸ் விடுதலை தினம்(1944)
2. இன்று க்யூபெக் நகரம் உருவாக்கப்பட்டது(1608)
1. இன்று அமெரிக்காவின் முதல் சேமிப்பு வங்கி நியூயார்க்கில் திறக்கப்பட்டது(1819)
0 Comments
Thanks for your comment