Home » , » tnpsc Police RRB Exam current affairs daily 5/7/2019

tnpsc Police RRB Exam current affairs daily 5/7/2019

Written By REMO RK on Jul 9, 2019 | July 09, 2019

current affairs daily 5/7/2019 

Tnpsc group-4 , Group-2 , Police Exam Current affairs Daily Download
Current Affairs Daily 2019
5/7/2019
Download Kanmani Current Affairs App


www.tnschools.co.in | tnpsc.exams9.in
19. தமிழகத்தில் ஏழை எளிய மகளிருக்கு விலையில்லா நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம் 528 பேரூராட்சிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சேலத்தில் அமைய உள்ள கால்நடை பூங்காவில் 48 கோடியே 81 லட்சம் மதிபீட்டில்  நாட்டுக்கோழி இண விருத்தி பண்ணை அமைக்கப்பட உள்ளதாகவும் கால் நடை துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
________________________________________
18. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறாமல் பாகிஸ்தான் அணி வெளியேறியது.
________________________________________
17. 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது அரசின் முறையான வரி வசூல் கொள்கையைப் பற்றிப் பேசும்போது புறநானூற்று வரிகளை முன்னுதாரணமாக எடுத்துக்கூறி நிர்மலா சீதாராமன் பேசினார்.
பாண்டிய மன்னன் அறிவுடை நம்பியைக் காணச்  சென்ற புலவர் பிசிராந்தையார் அரசன் சிறப்படைய இப்பாடல் வரிகளினைப் பாடினார்.
    
"காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பல்நாட்டு ஆகும்
நூறுசெறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே
வாய்புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே
கோடியாத்து நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவன் ஆகி,வைகலும்
வரிசை அறியாக் கல்என் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போல
தானும் உண்ணான் உலகமும் கெடுமே ! "
—(புறம்-184)

இப்பாடல் வரிகள் மூலம் பிசிராந்தையார் "அரசே! நெல்லை அறுத்து யானைக்கு உணவு சமைத்துப் போட்டால் அது பலநாட்களுக்கு உணவாகும். அதுவே, யானையே சாப்பிட்டுக் கொள்ளட்டும் என்று யானையை நெல்வயலில் விட்டால் அது பசியாற உண்பதைக் காட்டிலும் அதன் காலால் மிதித்துச் சிதைப்பது மிகையாகும். அதுபோல அறிவுடைய அரசானவனே குடிமக்களிடம் முறையாக வரி வாங்கினால் கோடியாக செல்வம் வளரும் நாட்டு மக்களும் விரும்புவர். முறையற்று தன் ஆட்களை ஏவி கருணை இன்றிப் பிடுங்கும் செல்வமானது யானை புகுந்த நிலம் போல் ஆகும். தானும் உண்ண மாட்டான். மக்களும் கெடுவார்கள்" என விளக்குகின்றார்.
________________________________________
16.மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:  என்சைக்ளோபிடியா போல் காந்திபிடியா திட்டம் அறிமுகம் செய்யப்படும். இதன் மூலம் காந்திய கொள்கைகள் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கப்படும். 
________________________________________
15. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ள சிறப்பு கோர்ட், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
________________________________________
14. காலம் காலமாக பிரீப்கேசில் கொண்டு வரப்படும் பட்ஜெட் உரை முறையை மாற்றி, இந்திய பாரம்பரிய முறைப்படி சிவப்பு துணியில் போர்த்தப்பட்டு பட்ஜெட் உரையை எடுத்து வந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
1860 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் போது பட்ஜெட் உரையை தாக்கல் செய்த வில்லியம் இ.கிலாட்ஸ்டோன், தனது பட்ஜெட் உரையை தங்கத்தில் ராணியின் உருவம் பதிக்கப்பட்ட சிவப்பு நிற சூட்கேசில் எடுத்து வந்தார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1947 ம் ஆண்டு இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த ஆர்.கே.ஷண்முகம் இதே முறையை பின்பற்றினார்.
________________________________________
13. ஹரியானாவில் பள்ளி மாணவர்கள் தினமும் 14 தோப்புக்கரணம் போட வேண்டும் என மாநில பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிகல்வித்துறை செயலர் ராஜீவ் குமார் கூறுகையில், மாணவர்கள் , தங்களது காதுகளை பிடித்து கொண்டு, காலையில் தினமும் தோப்புக்கரணம் போட வேண்டும். இது 'சூப்பர் பிரெயின் யோகா'(Super Brain Yoga). தோப்புக்கரணம் போடுவது மூளையின் திறனை அதிகரிக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது இது அவர்களின் மூளையை பலப்படுத்தும். நினைவாற்றலை அதிகப்படுத்தும். இந்த திட்டம், பிவாண்டி மாவட்டத்தில் உள்ள சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பள்ளியில் துவக்கப்படும். 
________________________________________
12.  லோக்சபாவில் 78 பெண் எம்.பி.,க்கள் உள்ளனர்.
________________________________________
11.மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பொதுத்துறை வங்கிகளின் மேம்பாட்டிற்கு ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மோசமான நிலையில் இ ருந்த 6 பொதுத்துறை வங்கிகள் மீட்கப்பட்டுள்ளன. எந்த சிக்கல் இல்லாமல், 8 பொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. புதிய திவால் சட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டில் 4 லட்சம் கோடி ரூபாய் வரை வாராக்கடன் வசூலாகியுள்ளது. 
________________________________________
10.அரசின் சலுகைகள் பெற ஆதார் கட்டாயம் இல்லை என உறுதியளித்துள்ள மத்திய அரசு, இது குறித்த ஆதார் மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்றியது.

ஆதார் எண்ணை ஒருவரின் அடையாளமாக பயன்படுத்த வகை செய்யும், ஆதார் மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதாவை லோக்சபாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். அமைச்சர் பேசுகையில், ஆதார் அட்டையை கடுமையாக அமல்படுத்தியதால், அரசின் கஜானாவில் உள்ள பணம் சேமிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளிலும் அரசின் பணம் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆதார் மூலம் 4.23 கோடி போலி காஸ் இணைப்புகள். 2.98 போலி ரேசன் கார்டுகள் நீக்கப்பட்டன. 7.48 லட்சம் கோடி ரூபாய் பயனாளர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. 
________________________________________
9. நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கை, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளில் சமர்ப்பிக்கப்படுவது நடைமுறை.இந்த ஆய்வறிக்கையில், ஜி.டி.பி., எனும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 2019 – 20ம் நிதியாண்டில், 7 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
________________________________________
8. ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 8 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-1, 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட்டில் ஜாய் கிளார்க்கை (இங்கிலாந்து) வீழ்த்தி 17-வது முறையாக 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
________________________________________
7. கோபா அமெரிக்கா கால்பந்து சிலி அணிக்கு அதிர்ச்சி அளித்து பெரு இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். 2 முறை சாம்பியனான பெரு அணி 1975-ம் ஆண்டுக்கு பிறகு கோபா அமெரிக்கா போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.
________________________________________
6. டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு ஆதித்தனார், சிவந்தி ஆதித்தனார் கல்லூரி வீரர்கள் தேர்வு
________________________________________
5. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் ஒப்பந்தப்படி ரூ.2,375 கோடி மதிப்பில் 13 புதிய தொழிற்சாலைகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
________________________________________
4. ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டங்களுக்கு தடை: தமிழக அரசு துணிச்சலான நடவடிக்கை:
                தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த அ.தி.மு.க. அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என்று தமிழக சட்டம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்திருக்கிறார்.
________________________________________
3. பிறநாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் ரஷியா தலையிடுவது இல்லை என்றும், இதுவே அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை விட ரஷியா தனித்துவமானது என்பதை உணர்த்துவதாகவும் அதிபர் புதின் கூறினார்.
________________________________________
2. ஆஸ்திரேலியாவில் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் நாள் ஒன்றுக்கு 7 பேர் உயிர் இழப்பதாக ஆய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
________________________________________
1.  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யிபின் நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானது.

Download as PDF

0 comments:

Post a Comment

Thanks for your comment

Total Pageviews

Popular Posts