current affairs daily in tamil 2019 28-9-2019

current affairs daily in tamil 2019  28-9-2019 |  நடப்பு நிகழ்வுகள் 28/09/2019

                                  
3.அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கந்தேரி, இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று ஐஎன்எஸ் கந்தேரி நீர்மூழ்கிக் கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

2.பிரபல எழுத்தாளர் மகரிஷி (87) சேலத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். 130 புதினங்கள், 5 சிறுகதை தொகுப்புக்கள், 60 கட்டுரை நூல்களை எழுதியவர் மகரிஷி. புவனா ஒரு கேள்விக்குறி, வட்டத்திற்குள் சதுரம் ஆகிய சினிமாக்கள் மகரிஷியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவை ஆகும்.

1.பிரதமர் மோடி 7 நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்காவுக்கு செப்., 20ல் புறப்பட்டு சென்றார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாகவும், நியூயார்க்கில் நடந்த 74வது ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கவும் மோடி அமெரிக்கா சென்றார். ஹோஸ்டனில் எரிசக்தி நிறுவன தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட மோடி 4.3 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
Post Navi

Post a Comment

0 Comments