current affairs 2019 - 14/10/2019

current affairs 2019 - 14/10/2019

4.உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று பெண்களுக்கான புளோர் பிரிவில் தனது சாகசத்தை காட்டி சிலிர்க்க வைத்த அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ் மொத்தம் 15.133 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதே போல் பேலன்ஸ் பீம் பிரிவிலும் சிமோன் பைல்ஸ் மகுடம் சூடினார். இந்த தொடரில் இது அவரது 5-வது தங்கமாகும். இதன் மூலம் உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் அவரது ஒட்டுமொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. உலக ஜிம்னாஸ்டிக்ஸ் வரலாற்றில் பெலாரஸ் வீரர் விடாலி ஸ்செர்போ 23 பதக்கம் வென்றதே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. அவரை 22 வயதான சிமோன் பைல்ஸ் பின்னுக்கு தள்ளி புதிய சரித்திரம் படைத்திருக்கிறார். இவர் ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்கம் வென்றது நினைவு கூரத்தக்கது.

3. எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளமும், சீனாவும் முடிவு
உலகிலேயே மிக உயரமான எவரஸ்ட் சிகரம் நேபாள நாட்டில் அமைந்துள்ளது. இந்த சிகரம் கடல் மட்டத்துக்கு மேல் 8,848 மீட்டர் உயரம் உள்ளதாக  1954-ஆம் ஆண்டு  மேற்கொண்ட கணக்கீட்டின்படி அறிவிக்கப்பட்டது.

2.இந்தியாவின் முதல் தனியார் ரெயில் ரெயில்வே கட்டணச் சட்டத்தை மீறி அதிக கட்டணம் வசூலிக்கிறது.
இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி) நாட்டின் முதல் தனியார் மூலம் இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை டெல்லி-லக்னோ பாதையில் அக்டோபர் 4-ந்தேதி முதல் தொடங்கியது.

1. ரூ.2000 நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Post Navi

Post a Comment

0 Comments