current affairs and gk daily 25-1-2020

tnpsc group 1, group-2, group-4 exam current affairs and gk in tamil 


8. உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இதற்கு முதுகெலும்பாக விளங்குவது இந்திய தேர்தல் ஆணையம் இது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. 1950 ஜன., 25ல் தொடங்கப்பட்டது. இதன் 60 ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் 2011 முதல் ஜன., 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்கு உணர்த்துவதே இதன் நோக்கம்.

7.குடியரசு தினமான நாளை(ஜன.,26) 1040 போலீசாருக்கு வீரதீர, சேவை விருதுகள் மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
வீர தீர செயலுக்கான விருது 286 பேருக்கும், வீரதீர செயலுக்கான ஜனாதிபதியின் போலீஸ் பதக்கங்கள் 4 பேருக்கும், சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கங்கள் 93 பேருக்கும், சிறப்பான சேவைக்கான போலீஸ் பதக்கங்கள் 657 பேருக்கும் வழங்கப்பட உள்ளது.

6.கடந்த 2015 டில்லி சட்டசபை தேர்தலில் 143 கோடீஸ்வரர்கள் போட்டியிட்ட நிலையில், வரும் பிப்., 08 ல் நடக்க உள்ள தேர்தலில் 164 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த முறை 50 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளதாக 13 வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 6 பேர் ஆம் ஆத்மியையும், 4 பேர் காங்கிரசையும், 3 பேர் பா.ஜ.,வையும் சேர்ந்தவர்கள். பணக்கார வேட்பாளர்களில், முதல் நான்கு இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் உள்ளனர்.

5. 'தமிழகத்தில் மலையாளிகள் எண்ணிக்கை, இருமடங்காக உயர்ந்துள்ளது,'' என, கேரள கலாசாரத் துறை அமைச்சர் ஏ.கே.பாலன் தெரிவித்தார்.

4.சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, பசிபிக் பெருங்கடலில் அமைந்து உள்ள, வனுவாட்டு தீவு நாட்டின் தேசிய வங்கியில், கணக்கு வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

3.அறிவியல், இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புகழ் பெற்று விளங்கிய, 10 பெண்களை கவுரவிக்கும் வகையில், அவர்களது பெயர்களில், பல்கலைகளில் இருக்கைகள் உருவாக்கப்படவுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தை சேர்ந்தவரும், புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞருமான, எம்.எஸ்.சுப்புலட்சுமி, மராட்டிய ராணி அகில்யா பாய் ஹோல்கர், மருத்துவ துறையை சேர்ந்த அனந்திபாய் கோபால்ராவ் ஜோஷி, விஞ்ஞானி கமலா ஷோனி, கல்வியாளர் ஹன்ஷா மேத்தா உள்ளிட்ட, 10 பேரின் பெயர்களில், இருக்கைகள் அமைக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


2.நேபாளத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியான சாகர்மாதா கூட்டத்துக்கு பிரதமர் மோடிக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில், 'சாகர்மாதா சம்பாத்' என்ற பெயரில் காலநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுபற்றி, நேபாளத்தின் வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி, கூறியதாவது: உலகளாவிய பிராந்திய மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க ஏப்., 2 முதல், 4ம் தேதி வரை காத்மாண்டுவில், 'சாகர்மாதா சம்பாத்' என்ற பெயரிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது.


1. டெல்லியில் பிரதமர் மோடியும், பிரேசில் அதிபர் போல்சனரோவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபின்னர், இரு நாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜேர் போல்சனரோ Jair Bolsonaro பங்கேற்கிறார். இதற்காக அவர் 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் குழுவும் வந்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் பிரேசில் அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரேசில் அதிபர் போல்சனரோ, பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது சுகாதாரம், சைபர் பாதுகாப்பு, பயோ எனர்ஜி உள்ளிட்ட முக்கிய துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த இருதரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளதாக மோடி தெரிவித்ததார்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post