current affairs and gk daily 26-1-2020
tnpsc group 1, group-2, group-4 exam current affairs and gk in tamil

9. குடியரசு தினத்தை முன்னிட்டு, நேபாளத்தில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு 30 ஆம்புலன்சுகளையும், பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 6 பஸ்களையும் இந்தியா பரிசாக வழங்கியுள்ளது.
8.நீர்மூழ்கி கப்பலில் இருந்து 5000 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணையை உருவாக்க டிஆர்டிஓ திட்டமிட்டுள்ளது.
இந்தியாவிடம் தற்போது உள்ள ஏவுகணைகளில், அக்னி-5 மட்டும் தரையில் இருந்து 5000 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது. நீர்மூழ்கி கப்பலில் இருந்து தாக்கும் ஏவுகணைகளில் அதிகபட்சம் கே-4 மட்டும் 3,500 கி.மீ., தூரம் சென்று தாக்கும்.
7. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் உள்ள இந்தியர்களின் நலன் மற்றும் உடல் ஆரோக்கியத்தை, அங்குள்ள நமது தூதரகம் மூலம் கண்காணித்து வருகிறோம் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
6. பத்மஸ்ரீ விருது பெறும் முகமது ஷெரிப், ஆதரவற்ற பல்லாயிரம் உடல்களை அடக்கம் செய்து வருகிறார். இதற்கு தனது மகன் இறப்பை காரணமாக கூறியுள்ளார்.
5. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, வீட்டு சுவர் ஏறி குதித்து கைது செய்த டிஎஸ்பி ராமசாமி பார்த்தசாரதிக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக ஜனாதிபதி காவலர் விருது வழங்கப்பட்டுள்ளது.
4. பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றிய, 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த, ஒன்பது பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசு நேற்று அறிவித்தது. வரும் மார்ச் - ஏப்.,ல் நடக்கும் விழாவில், இந்த விருதுகளை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்குவார்.
இந்தாண்டில், ஏழு பேருக்கு பத்ம விபூஷண், 16 பேருக்கு பத்மபூஷண் மற்றும், 118 பேருக்கு, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 34 பேர் பெண்கள்; 18 பேர் வெளிநாட்டவர்,வெளிநாட்டு வாழ் இந்தியர். இதைத் தவிர, 12 பேருக்கு மறைவுக்குப் பின் இந்த விருது வழங்கப்படுகிறது.
பத்மவிபூஷண்
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள், ஜார்ஜ் பெர்னான்டஸ், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ். பிரபல குத்துச்சண்டை வீரங்கனை, எம்.சி. மேரி கோம், கிழக்கு ஆப்பிக்க நாடான மொரீஷியசின் முன்னாள் அதிபர் அனிருத் ஜெகன்னாத், கர்நாடகாவைச் சேர்ந்த மறைந்த பெஜாவர் பீடாதிபதி ஸ்ரீ விஸ்வேஸ்வரதீர்த்த சுவாமி, உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் சாமுலால் மிஸ்ரா. பத்மபூஷண் - தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வேணு ஸ்ரீனிவாசன், சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜகனாதன், புதுச்சேரியை சேர்ந்த எழுத்தாளர் மனோஜ் தாஸ், பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்ரா, பா.ஜ.,வைச் சேர்ந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மனோகர் பரீக்கர், பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து உள்ளிட்டோர்.
பத்மஸ்ரீ - 118 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசை பாடகிகள் லலிதா மற்றும் சரோஜா சகோதரிகள், சமூக சேவகர் எஸ். ராமகிருஷ்ணன், கலைப் பிரிவில் மனோகர் தேவதாஸ் மற்றும் கலீ ஷாபி மகபூப் - ஷேக் மஹபூப் சுபானி சகோதரர்கள், அறிவியல் பிரிவில் பிரதீப் தலப்பில் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப் பிரிவில் புதுச்சேரியைச் சேர்ந்த, வி.கே. முனுசாமி கிருஷ்ணபக்தருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் கரண் ஜோகர், நடிகை கங்கணா ரனாவத், பாடகர் அத்னான் சாமி, ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் உள்ளிட்டோர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
3. இன்று நடைபெற்ற 71 வது குடியரசு தின விழா அணிவகுப்பில் பல்வேறு அம்சங்கள் முதல் முறையாக இடம்பெற்றுள்ளன. விமானப்படையின் ரபேல் போர் விமானம், ராணுவத்தின் பீஷ்மா போர் பீரங்கி உள்ளிட்டவைகள் முதல் முறையாக அணிவகுப்பில் இடம்பெற்றன.
2. லடாக்கில் 17,000 அடி உயரத்தில் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் குளிரில் குடியரசு தினத்தை கொண்டாடினர்.
1. இன்றைய 71-வது குடியரசு தின கொண்டாட்டத்தில் குர்தா பைஜாமா மற்றும் ஜாக்கெட் அணிந்திருந்த பிரதமர் மோடி, காவி நிறத்தில் வாலுடன் கூடிய தலைப்பாகை அணிந்திருந்தார்.
0 Comments
Thanks for your comment