8ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படாது

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படாது என்று தொடக்க கல்வி இயக்குனர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால், தினசரி மாலை வேலைகளில் ஒருமணி நேரம் சிறப்பு வகுப்பு எடுத்து மாணவர்களை தயார் படுத்த வேண்டுமென ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் அது குறித்து தொடக்க கல்வி இயக்குனர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அதில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான அறிவிப்பின் அடிப்படையில் ஈரோட்டில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும், சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்விதுறை தற்போது உத்தரவிடவில்லை என்றும் கூறியுள்ளார்.
0 Comments
Thanks for your comment