current affairs and gk daily 29-1-2020

tnpsc group 1, group-2, group-4 exam current affairs and gk in tamil








7.

பிரதமரின் உதவித்தொகையை, 38 லட்சம் விவசாயிகளுக்கு பெற்று தருவதற்கான நடவடிக்கையை, வேளாண் துறை துவங்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் உதவித்தொகை திட்டத்தை, மத்திய அரசு, 2019 முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிக்கு, 6,000 ரூபாய் வழங்கப்படும். சாகுபடி காலங்களில் இந்த நிதி, மூன்று தவணையாக, தலா, 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், இந்த திட்டத்தில், 36.7 லட்சம் விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில், 34.4 லட்சம் பேருக்கு, 2019ல், உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசு, 2,431 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. நடப்பாண்டிற்கான, முதல் தவணை நிதியை விடுவிக்கும் பணியை, மத்திய அரசு துவங்கியுள்ளது.அடுத்த மாதம், இரண்டாவது வாரத்திற்குள், இந்த நிதி, விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.

6.ஐரோப்பிய யூனியன் பார்லி.,யில் இன்று (ஜன.,29)இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற உள்ளது.இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள சிஏஏ.,வுக்கு எதிராக ஐரோப்பிய யூனியனில் கடந்த வாரம் 6 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. ஐரோப்பிய யூனியன் பார்லி.,யில் உறுப்பினர்களாக உள்ள 751 எம்.பி.,க்களில் 560 பேரால் இந்த தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இது சட்டவிரோதமானது எனவும், உலக அளவில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது எனவும் அவர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் இந்த தீர்மானங்கள் மீது இன்று (ஜன.,29) விவாதம் நடைபெற உள்ளது. தொடர்ந்து இந்த தீர்மானங்கள் மீது நாளை (ஜன.,30) ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது.



5.ஊடகங்களின் பார்வை படியாத பலருக்கு, இந்த ஆண்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக, 'காடுகளின் கலைக்களஞ்சியம்' என, சூழல் ஆர்வலர்களால் அன்போடு அழைக்கப்படும், துளசி கவுடாவுக்கு, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.



கர்நாடகத்தின் தாவண்கரே மாவட்டத்தைச் சேர்ந்தவர் துளசி கவுடா. ஹலக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் துளசிக்கு தற்போது 72 வயதாகிறது. கடந்த 60 ஆண்டுகளாக, கர்நாடக மாநிலத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளைத் தனியாக நடவு செய்துள்ளார். அந்த மரக்கன்றுகள் தனித்து வளரும் வரை, தொடர்ந்து அவற்றைப் பராமரிக்கவும் செய்கிறார். முறையான கல்வி கற்காத துளசிக்கு, தாவரங்கள் மற்றும் மூலிகைகள் பற்றிய எல்லையற்ற அறிவும் பார்வையும் இருந்துள்ளது. இதனால், துளசியின் அறிவுரையைப் பெற்றே, கர்நாடகாவில் காடு வளர்ப்புத் திட்டங்களை, வனத்துறையினர் செயல்படுத்தி வருகின்றனர்.



அரியவகைத் தாவரங்கள், மூலிகைகள் குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் துளசியைச் சந்திக்க, கர்நாடகாவிற்குப் படையெடுத்து வருகின்றனர். காடு சார்ந்த துளசியின் பரந்த அறிவைக் கண்டு வியக்கும், சூழல் ஆர்வலர்கள், 'காடுகளின் கலைக்களஞ்சியம்' என, துளசியை அழைக்கின்றனர். 'துளசிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருந்து, சூழலியலின் மேம்பாட்டிற்காக இயங்கிக் கொண்டிருக்கும் பலருக்கும், ஊக்கம் அளிப்பதாக உள்ளது' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் தெரிவித்துள்ளனர்.

4. மூன்றாவது டுவென்டி-20 போட்டியில் அசத்திய இந்திய அணி, 'சூப்பர் ஓவரில்' வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் முதன் முறையாக 'டுவென்டி-20' கோப்பை வென்று சாதனை படைத்தது.


3.1971ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின் படி, 20 வாரங்களுக்கு மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இதற்கான காலஅளவை 26 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் பாதுகாவலனாக அரசு செயல்படுகிறது. கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் குழந்தை, வளர்ச்சியை நிலையை எட்டிய பின்னர், தாய்க்கும் சிசுவுக்கும் பாதுகாப்பு அளிப்பது என்பது மத்திய அரசின் கடமை என குறிப்பிடப்பட்டிருந்தது.





இந்நிலையில் கருக்கலைப்புக்கான காலஅளவில் மாற்றம் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இந்தியாவில் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும் கால அளவை 24 வாரங்களாக உயர்த்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுபற்றி அமைச்சரவை கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது, என்றார். இதன்மூலம் அடுத்த வரவிருக்கும் பார்லி., கூட்டத்தொடரில் மருத்துவ கருக்கலைப்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஏமாற்றிய ஸ்பெயினின் ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடப்பு ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 'நம்பர்-1' ஸ்பெயினின் ரபெல் நடால், 5வது இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் மோதினர்.

நான்கு மணி நேரம், 10 நிமிடம் நீடித்த போட்டியில் தியம் 7-6, 7-6, 4-6, 7-6 என வெற்றி பெற்றார். இத்தோல்வியின்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பெடரருடன் (20) பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை நடால் (19) கோட்டைவிட்டார்.

1. உலகத்திலேயே போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகரங்களில் பெங்களூரூ முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.மும்பை நகரம் 4வது இடத்திலும், புனே 5வது இடத்திலும் , தலைநகர் டில்லி 8வது இடத்திலும் உள்ளன. 

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post